Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கோவிட் - 19 பெருந்தொற்று - வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 IMG_20220630_204225


2022-2023 ஆம் கல்வியாண்டில் 2022 ஜீன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது . மாணவர் சேர்க்கை பணிகள் மற்றும் உயர்கல்வி பயிலுவதற்கான மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் , மாணவர்களும் , ஆசிரியர்களும் மற்றும் அலுவலக பணியாளர்களும் பார்வை 2 - ல் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு கீழ்க்காணும் வழிமுறைகளை அனைத்து தலைமையாசிரியர்களும் பின்பற்ற அறிவுறுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Covid 19 SOP -  Proceedings - Download here...

1. தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோவிட் -19 பெருந்தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. பள்ளி வளாகத்தில் நுழையும் போது அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெப்பமானி கருவி மூலம் பரிசோதித்த பின்னர் வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும் . எவருக்கேனும் உடல் வெப்பம் மிகவும் அதிகமாக கண்டறியப்பட்டால் அன்னார் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.3. பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

4. அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்தினுள் Soap , Hand wash முதலியவை இருப்பதையும் தலைமையாசிரியர் உறுதி செய்தல் வேண்டும்.

5. தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் . உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை வகுப்பறைகளில் வேண்டும்.

6. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive