தமிழகத்தின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான அண்ணா பல்கலையில், கடந்த ஆண்டு பல்வேறு வகை விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற, மாணவர்கள் சார்பில், ஜி.எஸ்.டி., வரி செலுத்த உத்தரவிடப்பட்டது. இதற்கு, மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதற்கு பல்வேறு பிரிவுகளில் விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை பல்கலையிலும் விண்ணப்ப கட்டணத்துடன் ஜி.எஸ்.டி., வரி செலுத்துவது கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலையின் பதிவாளர் சார்பில், பல்வேறு துறைகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: வரும் கல்வி ஆண்டுக்கான பிஎச்.டி., மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
ஜூன் 1 முதல் 30 வரை, பல்கலையின் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதில் சுய விபரங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.அப்போது விண்ணப்ப கட்டணமாக, 500 ரூபாயுடன், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களுக்கு, ஜூலையில் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, பல்கலையின் துறை ரீதியான கமிட்டியால் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...