அவர் கூறியதாவது, கடந்த 5 ஆண்டுகளாக உயர், மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் 5000 இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இதனால் அரசுக்கு நிதிச் சுமை இல்லை. ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 1.20 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கின்றனர். இதற்கிடையில் தற்காலிக ஆசிரியர்கள் 13 ஆயிரத்து331 பேரை நியமிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, 'ஆட்சிக்கு வந்தால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோரை நியமிப்போம்' என்றார். ஆனால் அதை செயல் படுத்தவில்லை.எனவே ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் நியமனத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: தமிழக அரசின் மதிப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் நியமனம் புதிய கல்வி கொள்கையை வரவேற்பது போல் உள்ளது.2013ம் ஆண்டுக்குப் பின் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடக்கவில்லை. இந்நிலையில் ஆசிரியர் களை மதிப்பூதியத்தில் நியமிக்கும் உத்தரவை கண்டிக்கிறோம். தமிழக அரசு தகுதி வாய்ந்த நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்றார்.
*பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட இருப்பதைத் தமிழக அரசும் கல்வித்துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும்*
ReplyDeleteதமிழகத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முடிவினைக் கைவிட்டு, ஆசிரியர்களை நிரந்தரமாக நியமித்திட தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழக முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
ஏற்கனவே 2013ஆம் ஆண்டு TET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணி வாய்ப்புக்குக் காத்திருக்கும் தகுதியான நபர்களைக் கொண்டு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய TRB தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி வாய்ப்பு பெறாதோருக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட TRB தேர்வு முடிவை உடனடியாக வெளியிட்டு அதன் மூலமும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலமாக நிரப்பப்டவுள்ள பணியிடங்கள் புதிய பணியிடங்களோ அல்லது கூடுதல் பணியிடங்களோ அல்ல, இவை ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடங்கள் என்பதால் நிதிச் சுமை என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. இது போன்ற நிகழ்வுகள் புதிய கல்விக் கொள்கையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. மேலும் கல்விக்கு செலவிடும் தொகை அரசுக்கு செலவு அல்ல, அது சமூகத்திற்கான முதலீடு என்பதை உணர்ந்து இம்முடிவைக் கைவிட வேண்டும்.
2004- 2006 காலகட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை 2006 ஜூன் மாதம் முதல் பணி நிரந்தரம் செய்து தொகுப்பூதியத்தை ஒழித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நிரந்தர ஆசிரியரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
சே.பிரபாகரன்
மாநிலப் பொதுச்செயலாளர்
TNPGTA