11th Public Exam May 2022 Results
மே 10 முதல் 31 வரை 8.3 இலட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.பிளஸ் 1 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால், முன்கூட்டியே விடை திருத்த பணிகள் முடிந்து விட்டன. இதைத் தொடர்ந்து, பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு:
இன்று காலை 10:00 மணிக்கு பின் கீழ் உள்ள இணையத இணைப்பு மூலமாக பிளஸ் 1 தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்
மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண்களை பார்க்கலாம். மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கும் பிளஸ் 1 மதிப்பெண்கள் அனுப்பப்படும். மாவட்ட, மைய மற்றும் கிளை நுாலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக தேசிய தகவலியல் மையங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...