Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2022

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பெருமை

குறள் : 973
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

பொருள்:
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்

பழமொழி :

Measure thrice before you cut once

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.

 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.

பொன்மொழி :

நிம்மதிக்கான இரண்டு வழிகள்.
விட்டு கொடுங்கள்.
இல்லை விட்டு விடுங்கள்.
- புத்தர்

பொது அறிவு :

1.கோடைகாலத்தில் சாலைகளில் கானல் நீர் தோன்ற காரணம் : 

ஒளி பிரதிபலிப்பு.

 2. பிளாஸ்டிக் தொழிலில் பயன்படும் பிவிசி என்னும் சொல் எதைக் குறிக்கும்? 

பாலிவினைல் குளோரைடு.

English words & meanings :

nascent - just coming into existence. Adjective. புதிதாக உருவாகிய, பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

மனிதர்களின் உடலில் இருக்கும் கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பாகும். நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது. இப்படியான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும். கல்லீரல் பலம் பெறும்.

NMMS Q 15:

ஒருநாளில் கடிகாரத்தில் மணி மற்றும் நிமிட முட்கள் ஒன்று சேரும் நேரங்களின் எண்ணிக்கை? 

விடை: 24

ஜூலை 1


தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.[1] 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.


கல்பானா சாவ்லா அவர்களின் பிறந்த நாள்



கல்பானா சாவ்லா ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனை


நீதிக்கதை

பழைய நிலைமையை மறந்து விடாதே!

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.

இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.

அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.

அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.

இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.

மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.

இன்றைய செய்திகள்

01.07.22

◆குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்காணலுக்கு 137 பேர் தேர்ச்சி.

◆மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கிழக்குகடற்கரை சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கின. இதேபோல் தேவனேரி முதல் பூஞ்சேரி வரை தமிழக பாரம்பரிய சின்னங்களை விளக்கும் சாலையோர சுவரோவியங்கள் வரையப்படவுள்ளன.

◆சமூகநலத் துறை சார்பில் குழந்தைகள் நலனுக்கான 3 புதிய திட்டங்கள் தொடக்கம் - ரூ.7.32 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு.

◆தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

◆கோ-லொக்கேஷன் வழக்கு: என்எஸ்இ-க்கு ரூ.7 கோடி; சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.5 கோடி அபராதம் - ‘செபி’ நடவடிக்கை.

◆பிலிப்பைன்ஸ்: நோபல் பரிசு வென்ற பத்திரிகையாளரின் செய்தி நிறுவனத்தை மூட அரசு உத்தரவு.

◆இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று: காமன்வெல்த் போட்டிகளுக்கான பயிற்சி பாதிப்பு.

◆விம்பிள்டன் டென்னிஸ்; 3-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்.

Today's Headlines

◆Group-1 Main Exam Results Released: 137 Candidates Qualified for Interview.

 ◆East coast road repair work has started for the International Chess Olympiad to be held in Mamallapuram.  Similarly, roadside murals depicting the traditional symbols of Tamil Nadu will be drawn from Devaneri to Pooncherry.

 ◆The Government of Tamil Nadu has allocated Rs.7.32 crores for the initiation of 3 new schemes for the welfare of children under the Department of Social Welfare.

 ◆Central Cabinet approves computerization of Primary Agricultural Credit Unions.

 ◆Co-location case: Rs 7 crore to NSE;  Chitra Ramakrishna fined Rs 5 crore - 'SEBI' action.

 ◆Philippines: Government orders closure of Nobel Prize-winning journalist's news agency.

 ◆Coronavirus infection among Indian hockey players: Training for Commonwealth Games affected.

 ◆Wimbledon Tennis;  Djokovic advanced to the 3rd round.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive