வினாத்தாள் லீக் ஆகாமல், முறைகேடு நடக்காமல், முழு கண்காணிப்புடன் பொது தேர்வை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மாணவர்களுக்கு, வரும் 5ம் தேதி முதல் பொது தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், தேர்வை முறையாக நடத்துவதற்கான வழிகாட்டுதல் குழு கூட்டம், மாவட்ட வாரியாக நடத்தப்படுகிறது. இதன்படி, சென்னை மாவட்ட ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களுக்கான கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில், தேர்வு பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.அவர்களுக்கு, தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா மற்றும் அதிகாரிகள் வழங்கிய அறிவுரை: பொது தேர்வுக்கான வினாத்தாள் கையாளுவதில் மிக கவனம் தேவை; முறைகேடுகளுக்கு இடம் தரக்கூடாது.
அலட்சியம் காட்டினால், 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் வந்தால், அவர்களை காத்திருக்க வைக்காமல், தேர்வு மையங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும். நுழைவாயிலை தாமதமின்றி திறக்க வேண்டும்.
மாணவர்கள் பயமின்றி, பதற்றமின்றி தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். ஆள் மாறாட்டம், காப்பி அடித்தல் போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.மாணவர்களை தண்டிக்கும் நோக்கத்தை விட, அவர்களை தவறுகள் செய்யாத அளவுக்கு, கண்காணிப்புடன் தேர்வை நடத்த வேண்டும்.இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
Super
ReplyDeleteThis should b followed by Matric School and let them b corrected
ReplyDelete