'நீட்' தேர்வுக்கான ஆன்லைன் பதிவு அவகாசம், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பு கள் மற்றும் இந்திய மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நடக்கிறது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஏப்ரல் 6ல் துவங்கியது. வரும் 6ம் தேதி பதிவுக்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பப் பதிவுக்கான அவகாசத்தை, 15ம் தேதி இரவு 9:00 மணி வரை நீட்டித்து, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு ராணுவத்தில், மருத்துவ சேவைகள் வழங்குவது தொடர்பான, பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கும், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...