தமிழக பல்கலைகளில், கொரோனா தொற்று காரணமாக, 'ஆன்லைன்' முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன்பின், இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும், நேரடி முறையில் ௨௦௨௧ டிசம்பரில் நடத்தப்பட்டன. இறுதி செமஸ்டர் முடித்தவர்கள், மேல் படிப்புக்கு செல்லவும், வேலைவாய்ப்புகளை பெறவும் பட்ட சான்றிதழ் மிகவும் அவசியம்.
ஆனால், சென்னை மற்றும் அண்ணா பல்கலைகளில், கடந்த கல்வியாண்டில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, பட்டமளிப்பு விழா இன்னும் நடத்தவில்லை. அதனால், பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள், சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக கல்வி ஆண்டு முடிந்து, செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானதும், பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும். பல்வேறு நிர்வாக பிரச்னைகளால், பட்டமளிப்பு விழாக்கள், பல மாதங்கள் தாமதமாகிஉள்ளன. அண்ணா மற்றும் சென்னை பல்கலைகளில் பட்டமளிப்பு விழா நடத்திய பின்பே, இணைப்பு கல்லுாரிகளிலும் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதனால், இணைப்பு கல்லுாரி மாணவர்களாலும், பட்டச் சான்றிதழ் பெற முடியாத நிலை நீடிக்கிறது.
rayar
ReplyDelete