அதுபோல் பிரிவு இரண்டில், 34வது கட்டாய வினாவில், அ. 'அன்னை மொழியே' எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல். ஆ. 'நவமணியே வடக்க யில்போல்' எனத் துவங்கும் தேம்பாவணி பாடல் எனக் கேட்கப்பட்டுள்ளது. இதில் 'அ' அல்லது 'ஆ' என இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இரண்டு பாடலுக்கும் இடையே 'அல்லது' என இடம் பெறவில்லை. இதனால் இரண்டு பாடல்களையும் எழுத வேண்டுமா அல்லது 3 மதிப்பெண்ணிற்கான ஒரு பாடலை மட்டும் எழுத வேண்டுமா என மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.பல மாணவர்கள் ஒரு பாடலையும், சில மாணவர்கள் இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளதால் இவ்வினாவிற்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை சருகு வலையபட்டி பள்ளி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "அந்த வினாவிற்கு 3 மதிப்பெண் தான். ஆனால் முதல் பாடலுக்கு எட்டு வரிகள், இரண்டாம் பாடலுக்கு 6 வரிகள் எழுத வேண்டும். மூன்று மதிப்பெண்ணிற்கும் இரண்டு பாடல்களையும் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரண்டு வினாவிற்கும் இடையில் 'அல்லது' என்ற வார்த்தை விடுபட்டுள்ளதா என பெரும்பாலான ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...