🚫 *CPS ஒழிப்பு இயக்கம்* 🚫
*மாநில மையம்*
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
```RAJASTHAN state's implementation of OLD PENSION SCHEME : A HISTORIC HUMANE DECISION```
வணக்கம்.
இராஜஸ்தான்
மாநில அரசு தனது ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்தியுள்ளது தொடர்பாக அம்மாநில 'தகவல் & பொதுமக்கள்
தொடர்புத் துறை' நாடு முழுவதிலும் வெளியாகும் ஆங்கில தினசரி நாளிதழ்களில்
*'ஒரு வரலாற்றுப்பூர்வ மனிதநேய முடிவு'* எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள
விளம்பர அறிக்கை ஆங்கில தினசரி நாளிதழ்களின் முதல் பக்கத்தை முழுமையாக
அலங்கரித்துள்ளது.
இது வெற்று விளம்பரமாக
இல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டி நாடுமுழுவதும் போராடி வரும்
ஊழியர்களுக்கும் அவர்கள் பணியாற்றும் அரசு நிருவாகத்திற்கும் இடையேயான
'கோரிக்கையை வலுப்படுத்தும் பாலமாகவே' அமைந்துள்ளது எனலாம். ஏனெனில்,
அவ்விளம்பரம் ஒரு அரசின் சாதனை விளம்பரமாக இல்லாமல், ஊழியர்களின் &
பொதுமக்களின் நிலையில் நின்று அவர்களுக்கான உரிமையின் நியாயத்தைப்
பேசுவதாக, *இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ள ஒரு சேமநல
அரசிற்கான பார்வையில்* அவ்விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே,
*தமிழ்நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், ஆட்சியாளர்களும், அரசியல்
கட்சியினரும் குறிப்பாகப் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில், CPS
ஒழிப்பு இயக்கம் பொறுப்புணர்வுடன் அவ்விளம்பரத்தைத் தமிழ்ப்படுத்தி இங்கே
வெளியிடுகிறது.*
👇👇👇👇👇👇👇👇
👉
இராஜஸ்தான் அரசு தனது *2022-23 நிதிநிலை அறிக்கையில் 1.1.2004-ற்குப்
பிறகு பணியேற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதாக* அறிவித்தது.
👉 இதன் மூலம்
*அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை
(Gratuity), ஓய்வூதியத் திரண்ட தொகை (Commutation) உள்ளிட்ட பலன்கள்
கிடைப்பதால் அவர்களின் சமூகப் பொருளாதாரம் வலுவடையும்.*
👉 தற்போது பிடித்தம் செய்யப்பட்டு வரும் 10% பிடித்தம் உடனடியாக நிறுத்தப்படுவதால் 1.4.2022 முதல் அவர்களின் ஊதியம் உயரும்.
👉 கூடுதலாக இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கும் GPF வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு அவர்களின் பணி ஓய்வின் போது வழங்கப்படும்.
--- ----- ---- ----
*NPS-ஐ நடைமுறைப்படுத்தியதால் நேர்ந்தது என்ன?*
★ ஓய்வூதியத்திற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாமல் போனது.
★ ஊழியர்கள் 10% பங்களிப்பு செய்ய வேண்டியது கட்டாயமானது.
★
ஊழியர்களை மனித உரிமை மீறலில் இருந்து பாதுகாக்க வேண்டி, இந்திய ஒன்றிய
அரசிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் NPS-ஐ மறு ஆய்வு செய்யும் குழுவை
அமைக்கும்படி கேட்டுக் கொண்டது.
★ இரண்டாவது நீதித்துறை ஊதிய ஆணையம் நீதித்துறையினருக்கு NPS திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என பரிந்துரைத்தது.
★ கேரளா, ஆந்திரா, இமாச்சல் & பஞ்சாப் மாநில அரசுகள் NPS-ஐ மறு ஆய்வு செய்ய குழுக்களை அமைத்துள்ளன.
★
படைவீரர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதிலிருந்து அவர்களுக்குப் போதுமான சமூகப் பாதுகாப்பை பழைய ஓய்வூதியத்
திட்டம் மட்டுமே வழங்கும் என்பது தெள்ளத்தெளிவாகிறது.
--- ----- ---- ----
*NPS-ஐ திட்டமிடுதல், நடைமுறைப்படுத்தல் & பார்வையிடலில் மத்திய தணிக்கை ஆணையம் (CAG) வெளியிட்ட அதிர்ச்சிகரமான உண்மைகள் :*
★
NPS நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதற்கான
பணிசார் விதிகள் / NPS-ல் பணியேற்ற ஊழியர்களுக்கான ஓய்வுக்காலப் பலன்கள்
குறித்து தற்போது வரை இறுதி முடிவுகள் ஏதும் எடுக்கப்படாது கிடப்பிலேயே
போடப்பட்டுள்ளது.
★ இத்திட்டம் செயல்பட்டுவரும்
விதம் குறித்த வழக்கமான மதிப்பீடுகளை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை
மேற்கொள்ளுதல் சார்ந்தோ அல்லது வேறு ஏதாகிலும் தொழில்நுட்பத்தைச் சேர்த்து
இத்திட்ட நடைமுறை சார்ந்த நம்பகத்தன்மையை அறியவோ எவ்விதக்
குறியீட்டுமுறைமையும் இதில் இல்லை.
★ இத்திட்டத்தில் தகுதியானோருக்கான 100% வரையறைகளை உறுதி செய்வதில் இன்னமும் தேக்கமே உள்ளது.
--- ----- ---- ----
*பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் :*
★ ஊழியருக்கான ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி மாத ஊதியத்தின் 50%-ஐ ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் பெறுவர்.
★ பணவீக்கத்தில் இருந்து ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான பஞ்ச நிவாரணமாக இது இருக்கும்.
★ ஊழியர் எந்தவித பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை.
★ 33% வரையிலான ஓய்வூதியத் திரண்ட தொகை (Commutation) கிடைக்கக்கூடும்.
--- ----- ---- ----
*பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநில அரசிற்கு ஏற்படும் நேர்மறைப் பலன்கள் :*
★ நல்லாட்சி நடக்க உதவியாக ஊழியர்கள் தமது பணியில் அதிக ஊக்கத்தோடு செயல்படுவர்.
★ அறிவார்ந்த மற்றும் திறமைவாய்ந்த இளைஞர்கள் அதிக அளவில் அரசின் புதிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பர்.
★
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மாநில & மாநில மக்கள்
நலனுக்கான வளர்ச்சித்திட்ட நிதியிலிருந்து ஒரு ரூபாயைக்கூட குறைக்க வேண்டிய
தேவையிருக்காது.
*- தகவல் & பொதுமக்கள் தொடர்புத் துறை, இராஜஸ்தான் அரசு*
பழைய
ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி, மேற்கண்டவாறு அதற்கான
காரணத்தையும் ஒரு மாநில அரசே வெளியிட்டுள்ளது உள்ளபடியே மகிழ்வையும்
நம்பிக்கையையும் அதிகரிப்பதாகவே உள்ளது.
தமிழ்நாடு
CPS ஒழிப்பு இயக்கம் சார்பாக, இராஜஸ்தான் மாநில ஊழியர்களுக்கும்
மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடே இராஜஸ்தான் மாநில முதலமைச்சர்
திரு.அசோக் ஹெலாட் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கோள்கிறோம்.
_தோழமையுடன்,_
*மாநில ஒருங்கிணைப்பாள்கள்*
_மு.செல்வகுமார்_
_சு.ஜெயராஜராஜேஸ்வரன்_
_பி.பிரெடெரிக் எங்கெல்ஸ்_
*மாநில நிதிக் காப்பாளர்*
_சி.ஜான் லியோ சகாயராஜ்_
*CPS ஒழிப்பு இயக்கம்*
*மாநில மையம்*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...