Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Email பாருங்க...!!! தேர்வர்களுக்கு TRB இன்று வெளியிட்ட முக்கிய செய்தி!

IMG_20220401_234551

IMG_20220401_234602
 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 14/2019 ) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது . மேலும் , online வாயிலாக விண்ணப்பங்கள் மற்றும் கல்வித் தகுதி தொடர்புடைய ஆவணங்களும் பெறப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ள வேண்டி பணிநாடுநர்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ள கல்விச் சான்றிதழ்களுடன் கூடுதலாக சில சான்றிதழ்களை 11.03.2022 லிருந்து 18.03.2022 - ற்குள் இவ்வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இவ்வாரியத்தால் 1103.2022 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது.

 மேலும் , இப்பொருள் சார்ந்து கூடுதல் விவரங்களைப் பெற மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டது , இச்செய்திக் குறிப்பின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள் , பணி அனுபவச் சான்றிதழ் , நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்கள் Online வாயிலாகப் பணிநாடுநர்களிடமிருந்து பெறப்பட்டன . மேலும் , சில பணிநாடுநர்களிடமிருந்து Login ID மற்றும் Password பயன்படுத்துவது தொடர்பாகவும் , நன்னடத்தைச் ( Conduct certificate ) சான்றிதழ் பதிவேற்றம் செய்வது , இணைப்பாட விவரம் அளிப்பது / இணைப்பாடத்திற்கான ( Subject Equivalence ) அரசாணைகளைப் பதிவேற்றம் செய்வது குறித்து கூடுதல் விவரங்கள் கோரி மின்னஞ்சல்கள் இவ்வாரியத்தால் பெறப்பட்டது . இதனடிப்படையில் இவ்வாரியத்தால் 17.03.2022 நாளிட்ட செய்திக்குறிப்பின்படி , கூடுதல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இவ்வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான இறுதித் தேதி 18.03.2022 லிருந்து 25.03,2022 ஆக இவ்வாரியத்தால் நீட்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேலும் பல பணிநாடுநர்களிடமிருந்து மேற்காணும் பொருள் சார்ந்து மின்னஞ்சல்கள் பெறப்பட்டது. பணிநாடுநர்களிடமிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல்களுக்கு உரிய பதில்கள் மின்னஞ்சல் மூலம் இவ்வாரியத்தால் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது . அதிகப்படியான பணிநாடுநர்களிடமிருந்து கோரிக்கைகள் மின்னஞ்சலில் பெறப்பட்டதன் காரணமாக , 24.03.2022 நாளிட்ட இவ்வாரிய செய்திக் குறிப்பின்படி கூடுதல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இவ்வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான இறுதித் தேதி 25.03.2022 லிருந்து 01.04.2022 ஆக இவ்வாரியத்தால் நீட்டிக்கப்பட்டது.

இப்பொருள் சார்ந்து பணிநாடுநர்களிடமிருந்து Login ID மற்றும் Password பயன்படுத்துவது தொடர்பாக பெறப்பட்ட 2148 கோரிக்கை மனுக்களில் 2148 கோரிக்கை மனுக்களுக்கும் உரிய தகவல் மின்னஞ்சல் மூலம் இவ்வாரியத்தால் அளிக்கப்பட்டுள்ளது , நன்னடத்தைச் சான்றிதழ் ( Conduct certificate ) பதிவேற்றம் செய்வது தொடர்பாக பெறப்பட்ட 1398 கோரிக்கை மனுக்களில் 1085 கோரிக்கை மனுக்களுக்கு உரிய தகவல் மின்னஞ்சல் மூலம் இவ்வாரியத்தால் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் , இணைப்பாட விவரம் அளிப்பது / இணைப்பாடத்திற்கான ( Subject Equivalence ) அரசாணைகளைப் பதிவேற்றம் செய்வது குறித்து கூடுதல் விவரங்கள் கோரிப் பெறப்பட்டுள்ள 7609 கோரிக்கை மனுக்கள் , பணிஅனுபவச் சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பெறப்பட்டுள்ள 3465 கோரிக்கை மனுக்கள் மற்றும் பிற கோரிக்கை சார்ந்து பெறப்பட்டுள்ள 2438 மனுக்களுக்கும் உரிய பதில்களை சார்ந்த மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதற்கு இவ்வாரியத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே , ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ள பணிநாடுநர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பதில் பெறப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டுள்ள அனைவரின் கோரிக்கை மனுக்களும் பரிசீலனையில் உள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரிய குழுக் கூட்ட முடிவுகளின் அடிப்படையில் 10 தினங்களுக்குள் அனைவருக்கும் உரிய பதில்கள் மின்னஞ்சல் வாயிலாக அளிக்கப்படும். மேலும் , பணிநாடுநர்கள் ஏற்கனவே மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பிய தங்களது கோரிக்கை சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மீண்டும் அனுப்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive