உங்களை ஆபாசமாக பேசினாலும், ஆபாசமாக வீடியோ எடுத்தாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு ஏசிவிடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..
மதுவருந்திவிட்டு வகுப்பிற்குள் வந்தால் அனுசரித்துக்கொள்ளுங்கள் அவசரப்பட்டு வகுப்பிற்கு வெளியே அனுப்பிவிடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..உங்களை கம்பு & கற்கலால் அடித்தாலும், ஏன் கத்தியால் குத்தினாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு புகார் ஏதும் கொடுத்து விடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..
இத்தனையும் கடந்து நீங்கள் 100% தேர்ச்சி வழங்க வேண்டும். இல்லையேல் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை ஒப்பிட்டு தரக்குறைவாக பொதுமேடையில் ஆட்சியாளர்களே
உங்களை குற்றம் சாட்டுவோம் ஏனெனில் நீங்கள் தண்ட சம்பளம் வாங்கும் இரண்டாம் பெற்றோர்..
ஆம் நீங்கள் மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...