Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.04.22

   

திருக்குறள் :

அதிகாரம்:பயனில சொல்லாமை

திருக்குறள்:200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

விளக்கம்:

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

பழமொழி :

Don't bargain for fish that is still in the water.

கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே

இரண்டொழுக்க பண்புகள் :

1. முயற்சி பயிற்சி இரண்டும் பாதியில் விட மாட்டேன். தொடங்குவதில் இல்லை வெற்றி தொடர் தில் தான். 

2. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே

பொன்மொழி :

மேடு பள்ளம் நிறைந்தது தான் உலகம். அதுபோல இன்ப துன்பம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.___அன்னை சாரதா தேவி

பொது அறிவு :

1. தஞ்சை பெரிய கோயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு எது? 

2010.

 2. இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் எது? 

மத்திய பிதேசம்.

English words & meanings :

Oriental - belong to East or far East countries, தூர கிழக்கு நாடுகள் சார்ந்த, 

Otters - a brownish river animal that eats fish, நீர் நாய்

ஆரோக்ய வாழ்வு :

பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது. பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவைகள் குணமாகும். பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பலாச்சுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது. பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவைகள் குணமாகும். பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பலாச்சுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லதுபலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது. பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவைகள் குணமாகும். பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பலாச்சுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லதுபலாக்காயில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்ல பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

வைட்டமின் ஏ, பி, சி,

இரும்பு சத்து,

பொட்டாசியம்,

கால்சியம்,

புரதம்,

உயர்தரமான மாவுச்சத்து,

நார்ச்சத்து மற்றும் சபோனின்,லீக்கினேஸ் போன்ற தாவர ஊட்டச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.

கணினி யுகம் :

Alt + Shift + D - Insert the current date. 

Alt + Shift + T - Insert the current time.

ஏப்ரல் 25


உலக மலேரியா நாள்

உலக மலேரியா நாள் (World Malaria DayWMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர்.[1] மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.

2012 ஆம் ஆண்டில் அண்ணளவாக 627,000 பேர் மலேரியாவ் நோயால் இறந்துள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் குழந்தைகள் ஆவர்.


புதுமைப்பித்தன்  அவர்களின் பிறந்தநாள்

புதுமைப்பித்தன் என்ற  புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.[2] கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை  ஆக்கியது.


மார்க்கோனி அவர்களின் பிறந்தநாள்




மார்க்கோனிஎனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

நீதிக்கதை

உருவத்தை பார்த்து எடை போடாதே!

28 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான். அப்பா இங்கே பாருங்கள்... மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று! அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார். ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாபபட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

அப்பா மேலே பாருங்கள், மேகங்கள் நம்மோடு வருகின்றன என்றான். இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர். அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார்.

நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்… என் மகன் பிறவிக் குருடு இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார். அன்பு நண்பர்களே... உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம். சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம். உருவத்தை பார்த்து யாரும் யாரையும் எடை போடவேண்டாம்.

இன்றைய செய்திகள்

25.04.22

✨கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

✨தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

✨10, 11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்.

✨ஆதாரமற்ற, வன்முறையை தூண்டும் தகவல்களை பரப்ப வேண்டாம் என தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

✨நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக மேலும் 50 கோடி டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

✨ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்று சாதனை.

✨இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி- போட்டி விவரங்கள் அறிவிப்பு.

Today's Headlines

 Chief Minister will consult about corona protection measures today: Minister Ma. Subramaniam

 There is a chance of rain for 5 days in Tamil Nadu: Chennai Meteorological Center announced.

 10th, 11th, and 12th class practical exams start today.

 The federal government has ordered television channels not to spread unauthenticated and violent information.

 India has agreed to provide another $ 500 million in fuel imports to Sri Lanka, which is facing a financial crisis.

 Asian Wrestling Championship: Indian wrestler Ravi Kumar wins gold.

 South African cricket team touring India - Match details announced.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive