ரூ.2.5 லட்சத்துக்குமேல் பி.எஃப் முதலீடு: வருமான வரி எப்படி விதிக்கப்படுகிறது?
ஆர்.ஜெகதீஷ், ஆடிட்டர்
பெரும்பாலான பணியாளர்களின் கட்டாய ஓய்வுக்கால சேமிப்பாக சேமநல நிதி என்கிற பிராவிடன்ட் ஃபண்ட் (பி.எஃப்) இருக்கிறது. இந்த பி.எஃப் பிடித்தம் என்பது இரண்டு விதமாக மேற் கொள்ளப்படுகிறது. முதல் முறையில், ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி (DA) சேர்ந்த
தொகையில் 12 சதவிகிதமாக இருக்கும். இந்தத் தொகை ஒருவரின் சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க உயர்ந்துகொண்டே வரும். இதே அளவு தொகையை நிறுவனமும் அளிக்கும். இது நிறுவனத்தின் விருப்பத்தைச் சார்ந்த விஷயமாக உள்ளது.
அடுத்து, பணியாளர் பி.எஃப் சட்டம் பிரிவு 6-ன்படி, பணியாளரின் சம்பள உச்சவரம்பு ரூ.15,000 என எடுத்துக் கொண்டு, அதற்கு 12% மட்டும் அதாவது, ரூ.1,800 மட்டுமே பி.எஃப் பிடிக்கலாம். இதே அளவு தொகையை நிறுவனமும் அதன் பங்களிப்பாக அளிக்கும். அதற்குமேல் நிறுவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.
இந்த இரு முறைகளிலும் நிறுவனம், உறுப்பினரின் சம்பளத்தில் பிடிக்கும் பி.எஃப் தொகை (பேசிக் + டி.ஏ-யில் 12%) அல்லது ரூ.1,800 என்பது பி.எஃப் கணக்கில் சேரும். நிறுவனம் செலுத்தும் தொகையில் ரூ.1,250 பணியாளர் ஓய்வூதியத் திட்டத்துக்கு (Employees Pension Scheme - EPS) செல்லும். இதற்கு வட்டி எதுவும் கிடைக்காது. இப்படிச் சேரும் தொகையின் அடிப்படையில் பணி ஓய்வுக்குப் பின்னர் பென்ஷன் கிடைக்கும்.
விருப்ப பி.எஃப்...
இந்த நிலையில், ஒருவருக்கு எவ்வளவு தொகை பி.எஃப் பிடிக்கப்பட்டாலும், அவர் விருப்ப பி.எஃப் என முழுச் சம்பளத்தையும் வி.பி.எஃப்-ஆக பி.எஃப் கணக்கில் சேர்க்கலாம். இந்த வி.பி.எஃப் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு என்பதால், பலரும் இதைப் பயன்படுத்தி கூடுதல் வரிச் சலுகை பெறு வதுடன், லாபமும் அடைந்து வருகிறார்கள்.
மேலும், பி.எஃப்-க்கான வட்டி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியைவிட அதிகமாக இருப்பதால், இதில் பலரும் அதிக தொகையைச் சேர்க் கிறார்கள். அண்மையில் பி.எஃப்-க்கான வட்டி 8.5 சத விகிதத்திலிருந்து 8.1 சதவிகித மாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அப்படிக் குறைக்கப்பட்டாலும், இதர நிலையான வருமானம் தரும் திட்டங்களுடன் ஒப்பிடும் போது, பி.எஃப் வட்டிதான் அதிகமாக இருக்கிறது. எஃப்.டி மூலமான வருமானம் தற்போது 5 - 6 சதவிகிதமாகவும், அனைவருக் குமான பி.பி.எஃப் வட்டி 7.1 சத விகிதமாகவும் உள்ளது.
ஒரு நிதி ஆண்டில் பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் மூலம் தனியார் நிறுவன ஊழியர்களின் பி.எஃப் கணக்கில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் செலுத்தப்படும்பட்சத்தில், அதன் மூலமான வட்டிக்கு வரி கட்ட வேண்டும். ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும் தொகைக்கு தனி பி.எஃப் கணக்கு
பராமரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் வரைக்கும் வரி இல்லை.
2021-22-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்க்குமுன் பி.எஃப் வட்டி வருமானம் எவ்வளவு தொகையாக இருந்தாலும், வரி எதுவும் கிடையாது. 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நிதி ஆண்டில் பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் மூலம் சேர்க்கும் தொகையானது தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு ரூ.2.5 லட்சத்தைத் தாண்டினால், அரசு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சத்தைத் தாண்டினால், அந்தத் தொகைக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வருமான வரியானது ஒருவர் எந்த வருமான வரி வரம்புக்குள் வருகிறாரோ, அதற்கேற்ப (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%) வரி கட்ட வேண்டும்.
வருமான வரியைக் கணக்கீடு செய்ய வசதியாக 2021-22-ம் ஆண்டு முதல், ஒருவருக்கு இரு தனித்தனி பி.எஃப் கணக்குகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒரு கணக்கில் நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சம் வரை செலுத்தப்படும் தொகை பராமரிக்கப்படும். இந்தக் கணக்கில் 2021 ஏப்ரல் 1-ம் தேதிக்குமுன் உறுப்பினர் பி.எஃப் கணக்கில் சேர்ந்திருக்கும் தொகை சேர்க்கப்பட்டிருக்கும். இதன்மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி எதுவும் கிடையாது.
இரண்டாவது கணக்கில் 2021 ஏப்ரல் 1-க்குப் பிறகு, நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பி.எஃப் கணக்கில் உறுப்பினர் செலுத்தும் தொகை நிர்வகிக்கப்படும். இதில் ஆண்டுக்கு ஒருமுறை 8.1% வட்டி கிடைக்கும். அந்த வட்டிக்கு வரி கட்ட வேண்டும். மேலும், இந்தக் கணக்கில் சேரும் வட்டிக்கு அடுத்து வரும் ஒவ்வோர் ஆண்டும் வரி கட்ட வேண்டி வரும்.
தற்போது பி.எஃப்க்கு 8.1% வட்டி வழங்கப்படுகிறது. ஒருவர் பி.எஃப் கணக்கில் சேர்க்கும் தொகை ரூ.2.5 லட்சத்துக்குமேல் செல்லும்பட்சத்தில், வட்டிக்கு வரி விதிக்கப்படும். இந்த அளவுக்கு அதிகமாக ஒருவர் பி.எஃப்
கணக்கில் பணம் சேர்க்கிறார் எனில், அவர் 20% - 30% வரி வரம்பில்தான் வர வேண்டும். 20% மற்றும் 29% வரம்பில் வந்தால் வருமான வரிக்குப் பிறகான வருமானம் முறையே 6.48% மற்றும் 5.67 சதவிகிதமாக இருக்கும்.
தற்போதைய நிலையில், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு சராசரியாக 6% வட்டி கிடைத்தாலே பெரிய விஷயம். இந்த வருமானத்துக்கு 20% மற்றும் 30% வரி விதிக்கப்பட்டால், வரிக்கு பிந்தைய வருமானம் முறையே 4.8% மற்றும் 4.2 சதவிகிதமாக இருக்கும். அந்த வகையிலும் பி.எஃப் வட்டி தான் லாபகரமாக இருக்கும்.
எனவே, பி.எஃப் முதலீடு நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டினாலும் கவலைப்படத் தேவையில்லை.ரூ.2.5 லட்சத்துக்குமேல் பி.எஃப் முதலீடு:
வருமான வரி எப்படி விதிக்கப்படுகிறது?பி.எஃப் அண்மையில் பி.எஃப் வட்டி 8.5 சதவிகிதத்திலிருந்து 8.1c சதவிகிதமாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. அப்படிக் குறைக்கப்பட்டாலும், இதர நிலையான வருமானம் தரும் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, பி.எஃப் வட்டிதான் அதிகமாக இருக்கிறது!
பங்களிப்பு தொகைக்கு வரி கிடையாது..!
பணிபுரியும் நிறுவனம் பி.எஃப் கணக்கில் தொகை எதுவும் அளிக்கவில்லை எனில், நிதி ஆண்டில் பி.எஃப் கணக்கில் செலுத்தப்படும் ரூ.5 லட்சம் வரைக்கும் வரி எதுவும் விதிக்கப்படாது. இந்தப் புதிய வரி விதிப்பில் பங்களிப்புத் தொகை எதற்கும் வரி கிடையாது. வட்டி வருமானத்துக்கு மட்டும்தான் வரி விதிக்கப்படும். பணியாளரின் சம்பளத்திலேயே பங்களிப்புத் தொகைக்கு வரி விதிக்கப்பட்டுவிடுவதே இதற்குக் காரணம் ஆகும்.
பாதிப்பு எவ்வளவு?
பி.எஃப். கணக்கில் ரூ.2.5 லட்சத்துக்குமேல் சேர்க்கப்படும் தொகைக்கு மத்திய அரசு வரி விதித்திருப்பதால் அதிக பேர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது பி.எஃப் அமைப்பு வெளியிடும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரியவருகிறது. நிதி ஆண்டில் பி.எஃப் உறுப்பினர் மற்றும் நிறுவனம் செலுத்தும் தொகை ரூ.5 லட்சத்துக்குக்கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 93 சதவிகிதமாக உள்ளது. ஆக, புதிய பி.எஃப் வரி விதிப்பால் பாதிக்கப்படுவது 7% பேர் மட்டுமே
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...