திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: கள் உண்ணாமை
குறள்: 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
பொருள்:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?
பழமொழி :
A bad tree does not yield good apples.
நஞ்சு மரம் நற்கனி ஈனாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1.நன்மை என்றாலும் தீமை என்றாலும் நான் எதை விதைப்பேனோ அதை அறுப்பேன்.
2. எனவே கீழ்படிதல், அமைதி, பொறுமை போன்ற நல் விதைகளை இம்மாணவ பருவத்தில் விதைக்க முயற்சிப்பேன்
பொன்மொழி :
பிறரின் இன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள்க. மற்றவர் துன்பத்தில் பங்கேற்று உதவி செய்க___ புத்தர்
பொது அறிவு :
1. ஐ.நா வின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்.
2. இந்தியாவில் எத்தனை இரயில்வே மண்டலங்கள் உள்ளன?
18.
English words & meanings :
Keypad - a miniature keyboard to operate portable devices like mobile, சிறு விசைப்பலகை,
keynote - the central idea of a book or a speech, மையக்கருத்து
ஆரோக்ய வாழ்வு :
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள் இந்த உடல் நலக்குறைவை தகர்த்து விடுகிறது. தினமும் எலுமிச்சை சாறு நீரில் கலந்து பருகி வர மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
கணினி யுகம் :
Ctrl + ' - Copy the above formula.
Ctrl + ~ - Show formulas
நீதிக்கதை
அனுபவமே குரு
ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். அதனால் அவருடைய முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை சொன்னார். தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்!
சில விநாடிகள் யோசித்தவர், எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா? என்று பணிவோடு கேட்டார். மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழு ஈடுபாட்டுடன் அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.
ஏதோ ஒருபொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார். வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது என்கிற அலட்சிய மனதுடன் வேலை செய்தார்.
வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி.வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி! என்றார் முதலாளி.
மேஸ்திரிக்கு ஒரே அதிர்ச்சி! என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், அழகாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே என்று மனதுக்குள் மிகவும் வருத்தப்பட்டார்.
பல சந்தர்ப்பங்களில் நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்! இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே.. என்று மனம் புழுங்குகிறோம்
நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம். நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.
இன்றைய செய்திகள்
20.04.22
🌸இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் அது 6.0 ஆக பதிவானது.
🌸உத்தரப் பிரதேசத்தில் 6 மாவட்டங்களில் முகக் கவசம் கட்டாயம் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
🌸ஸ்டெர்லைட் கழிவு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
🌸ராமேஸ்வரம்: இந்தியா - இலங்கைக்கு இடையே உள்ள தனுஷ்கோடி - தலைமன்னாரை இணைக்கும் பாக் ஜலசந்தியை 10 மணி நேரத்திற்குள் நீந்தி நவி மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவர் அன்சுமான் இன்று சாதனை படைத்தார்.
Today's Headlines
🌸A powerful earthquake shook Indonesia this morning. On the Richter scale, it was recorded as 6.0.
🌸 The state government has issued an order mandating face masks in six districts in Uttar Pradesh
🌸 Chennai High Court orders Pollution Control Board to respond to Sterlite waste
🌸Rameswaram: Ansuman, a student from Navi Mumbai, set a new record today by swimming the Dhanushkodi-Thalaimannar link between India and Sri Lanka within 10 hours.
Prepared by
Cover women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...