திருக்குறள் :
இயல்: நட்பியல்
அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை
குறள்: 896
எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
பொருள்:
நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது
பழமொழி :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை
குறள்: 896
எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
பொருள்:
நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது
பழமொழி :
Break his head and bring a plaster.
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவதா?
இரண்டொழுக்க பண்புகள் :
1.நன்மை என்றாலும் தீமை என்றாலும் நான் எதை விதைப்பேனோ அதை அறுப்பேன்.
2. எனவே கீழ்படிதல், அமைதி, பொறுமை போன்ற நல் விதைகளை இம்மாணவ பருவத்தில் விதைக்க முயற்சிப்பேன்
பொன்மொழி :
உடல் தூய்மையை விட மனத்தூய்மையே அவசியமானது. இதயத்தை நல்ல எண்ணத்தால் நிரப்பு._____ஏசு கிறிஸ்து
பொது அறிவு :
1. தமிழ்நாட்டின் வியாபார நகரம் எது?
விருதுநகர்.
2. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது எது?
சென்னை.
English words & meanings :
jackpot - a large cash prize in a game, விளையாட்டில் கிடைக்கும் அதிக பண பரிசு,
janitor - a doorkeeper or gatekeeper of a building, வாயில் காப்போர்
ஆரோக்ய வாழ்வு :
கொத்தவரங்காய் ஓர் உன்னத உணவும்,மருந்தும் ஆகும். இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் மிகுதியாக உள்ளது. போலிக் அமிலத்தை உடையது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு, போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்து தேவைப்படுகிறது. ரத்தத்தில் சக்கரையின் அளவை குறைக்கிறது. ரத்த சோகையை சரிசெய்கிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கணினி யுகம் :
Ctrl + 0 - Hide column.
Shift + Ctrl + 0 - Unhide the column
ஏப்ரல் 19
பியேர் கியூரி அவர்களின் நினைவுநாள்
பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர். அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக தாவி விருது வழங்கப்பட்டது. பியேர் கியூரி- மேரி கியூரி இணையர் நோபல் பரிசு பெற்றவர்கள். அதே போன்று இவர்களின் மூத்த மகளான ஐரீன் ஜோலியட் கியூரி,விஞ்ஞானியான ஃபிரெடரிக் ஜோலியட் என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து கதிரியக்கம் பற்றி தொடந்து ஆய்வுகள் செய்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டக்கும் வழியொன்றைக் கண்டு பிடித்தனர். இதற்காக 1935-ல் ஐரின் கியூரிக்கும் அவரது கணவருக்கும் நோபல் பரிசுவழங்கப்பட்டது
நீதிக்கதை
நாளை என்பது நம் கையில் இல்லை
ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம், என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை, எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.
கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அட பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான், என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.
இன்றைய செய்திகள்
19.04.22
🔶26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.24 முதல் 4.59 மீட்டர் வரை உயர்வு: தமிழக அரசு தகவல்.
🔶ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
🔶1,089 கால்நடை மருத்துவப் பட்டதாரிகளுக்கு கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
🔶அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிவிதிப்பு அடுக்குகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. 5 சதவீத வரியின்கீழ் வரும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு 3 சதவீதமாக வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔶பெட்ரோல், டீசல் விலை ஒரே நாளில் 35% வரை உயர்வு: கடும் நெருக்கடியில் இலங்கை மக்கள்.
🔶அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கா தாமதிப்பதாக ஈரான் குற்றச்சாட்டு.
🔶தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி: அரியானா அணி சாம்பியன்.
🔶பிரீமியர் லீக் கால்பந்து: ரொனால்டோ ஹாட்ரிக் கோல் - மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி.
Today's Headlines
▶ Groundwater level rises from 0.24 to 4.59 meters in 26 districts: Government of Tamil Nadu.
▶The Teacher Selection Board has given a deadline of April 26 to apply for the Teacher Qualification Examination.
▶Chief Minister MK Stalin issued appointment orders for veterinary assistant posts for 1,089 veterinary graduates.
▶ It is said that at the GST Council meeting next month, new changes will be made in the tax brackets. The tax is expected to be reduced to 3 per cent for some essential items that come under the 5 per cent tax.
▶Petrol, diesel prices rise by 35% in one day: Sri Lankans in dire crisis
▶Nuclear deal: Iran accuses the US of delaying
▶National Senior Men's Hockey Tournament: Haryana Team Champion.
▶Premier League football: Ronaldo hat-trick goal - Manchester United win.
Prepared by
Cover women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...