திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை
குறள் : 892
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்
பொருள்:
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்
பழமொழி :
we can take a horse to water but can't it make it drink.
தானாக கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்தால் கனியுமா?
இரண்டொழுக்க பண்புகள் :
1. அதிக பேச்சு என்னை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் எனவே அதிகம் பேசாத படி பார்த்துக் கொள்வேன்.
2. பொறுமை பெருமை தரும் எனவே எப்போதும் பொறுமையாக இருக்க முயல்வேன்.
பொன்மொழி :
ஐம்புலன்களுக்கு அடிமையாவது நல்லதல்ல. அவற்றை ஆட்சி செய்யும் நிலைக்கு மனிதன் உயர வேண்டும்.____சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
1. தேசிய விளையாட்டு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஆகஸ்ட் 29.
2. சர்வதேச திருநங்கையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 31.
English words & meanings :
Heals - to become healthy from sickness, நோய் நீங்கி குணமாதல்,
hedge - a fence formed by a row of bushes, புதர் வேலி
ஆரோக்ய வாழ்வு :
நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும் , சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு மற்றும் தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படுகிறது. உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது.ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாகும்.பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரையை மாற்றும்
கணினி யுகம் :
Ctrl + L - Align selected line to the left.
Ctrl + Q - Align the selected paragraph to the left
ஏப்ரல் 13
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
நீதிக்கதை
அடிமையானக் குதிரை
ஒரு குதிரைக்கும், கலைமானுக்கும் இடையில் சிறு பகை ஏற்பட்டதால் அக்கலைமானை ஒழித்துக் கட்ட எண்ணியக் குதிரை ஒரு மனிதனின் உதவியை நாடியது. அதன் வேண்டுகோளை ஏற்ற மனிதன் குதிரைக்குச் சேணமும், கடிவாளமும் போட்டான். அதன் மீது சவாரி செய்து கலைமானை விரட்டிப் பிடித்துக் கொன்றான்.
தனது பகைவன் ஒழிந்ததைக் கண்டு மகிழ்ந்த குதிரைக் கனைத்தது. தன் எதிரியை ஒழித்த மனிதனுக்கு நன்றி கூறியது. தன் கடிவாளத்தை நீக்கித் தன்னை விடுவிக்கும்படி வேண்டியது.
குதிரையே, உன்னை விடுவிப்பதா! அது முடியவே முடியாது. நான் வசதியாகச் சவாரி செய்ய நீ எனக்கு மிகவும் பயன்படுவாய். ஆகையால் உன்னை விடுவிக்கவே மாட்டேன் என்று கூறிச் சிரித்தான்.
அன்று முதல் குதிரை, மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது. குதிரையின் வஞ்சம் தீர்ந்தது. ஆனால் அது தன் சுதந்திரத்தினை இழந்து அடிமையாகவே இருக்க வேண்டியதாயிற்று.
நீதி :
பிறருக்கு கேடு நினைப்பவன் நிச்சயம் கெட்டுப்போவான்.
இன்றைய செய்திகள்
13.04.22






Today's Headlines






Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...