தமிழகத்தில் 2022 – 23 ம் கல்வியாண்டில் 11 ம் வகுப்புகள் தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13 ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2020 ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆன்லைன் கல்வியில் மாணவர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். இதனையடுத்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் மீண்டும் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.
இந்த நேரத்தில் கொரோனா மூன்றாம் அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு மீண்டும் நடத்தப்பட்டது. கடந்த வருடம் கொரோனா பரவும் சூழ்நிலையில் பொதுத்தேர்வை நடத்த முடியாத சூழல் நிலவியது. அதனால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதில் 1 -12 வரையிலான வகுப்புகளுக்கான தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 1 – 5 வரையிலான வகுப்புகளுக்கு மே 13ம் தேதி கடைசி வேலை நாளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2022- 2023 ம் கல்வியாண்டில் 11ம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு ஜூன் 13ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...