Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.04.22

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்

குறள் : 877

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து

பொருள்:
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.

பழமொழி :

From the frying pan into the fire 

பூனைக்கு பயந்து புலி கிட்ட மாட்டிக் கொள்ளுதல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நடை, ஆடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன். 

2. ஆசிரியர்கள் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் ஆக நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

கோபத்தின் ஒரு நொடியில் பொறுமையாக இருந்தால், நூறு நாள் துன்பத்திலிருந்து தப்பிக்கலாம்_____ சீனப் பழமொழி

பொது அறிவு :

1. உலக விண்வெளி ஆண்டாக எந்த ஆண்டு கொண்டாப்பட்டது? 2009. 2 . எந்த பொருள் 100 % மறுசுழற்சி செய்யக்கூடியது? கண்ணாடி.

English words & meanings :

Estuary - a wide mouth of a river where it joins the sea, கழிமுகம்,

Ecosystem - all living and non-living things in a particular area, சுற்று சூழல் அமைவு

ஆரோக்ய வாழ்வு :

பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். 
மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.

கணினி யுகம் :

Ctrl + D - Fill. 

Ctrl + G - Open go to options

ஏப்ரல் 08


பங்கிம் சந்திர சட்டர்ஜி  அவர்களின் நினைவுநாள்




பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838 – ஏப்ரல் 8, 1894) ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

நீதிக்கதை

குறையா? நிறையா?

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வாழ்ந்து வந்தான். அவன் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானை குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துகொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் ஆனது. கேலியைப் பொறுக்கமுடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். என் குறையை நீங்கள் சரிசெய்யுங்களேன் என்றது. 

பானையே! நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? என்று அதன் எஜமானன் கேட்டான். உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுவில் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். இறைவனுக்குப் பூஜை செய்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்ட பானை அதன் வருத்ததை நிறுத்திவிட்டது. அடுத்தவர் பேச்சைப்பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத்தொடங்கியது. 

நீதி :
மற்றவர்கள் பேசுவதை நினைத்துக்கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.

இன்றைய செய்திகள்

08.04.22

🌼10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி பொருத்த தேர்வுத்துறை உத்தரவு.

🌼 இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டு தூதர்  இம்மானுவேல் லெனைன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரியா ராஜனை சந்தித்தார்.

🌼 தமிழகத்தின் பனை மரத்தின் பரப்பை அதிகரிக்க 293 கோடி ரூபாய் ஒதுக்கீடு

🌼 சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 9 பாலங்களை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

🌼 கோவை நகரில் உள்ள 16 மாநில நெடுஞ்சாலைகளைச் சீரமைக்கும் பணி, ரூ.140 கோடி மதிப்பில் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளது.

🌼 கொரிய ஓபன் பேட்மிண்டன்  போட்டி: இந்தியாவின் பி.வி. சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம்..!

Today's Headlines

🌼Department of Education ordered to fit CCTV in 10th, 11th, and 12th class general examination question paper control centers.

 🌼  French Ambassador to India Immanuel Lenin met Chennai Corporation Commissioner Priya Rajan.

  🌼 Rs. 293 crores were allocated to increase the area of ​​palm trees plantation in Tamil Nadu

 🌼 Chennai: In order to reduce traffic congestion, Chief Minister Stalin has opened 9 newly completed bridges in Tamil Nadu and made them available for public use.

 🌼 Reconstruction work on 16 States highways in Coimbatore will begin next week at a cost of Rs 140 crore.

  🌼 Korean Open Badminton Tournament: India's P.V.  Sindhu, Srikanth advance to quarterfinals
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive