Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET லிருந்து விலக்கு அரசாணை - அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் வேதனை!

  கோவை அனுப்பர் பாளையத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் குறைதீர் மனுக்கள் பெறும் கூட்டம் நேற்று (9/3/22) மாலையில் நடந்தது.
இதில், தமிழ்நாடு அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் இரா.தமிழரசு கலந்து கொண்டார். தமிழக அரசு கவனத்தில் கொண்டு செல்ல வேண்டிய வேண்டுதல் மனுக்களைப் பெற்ற பின்னர் அளித்த பேட்டியில்,
தமிழக அரசின் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி நிரந்தர பணியிடத்தில் முறையாக ஒப்புதல் பெற்று,
(அப்போதைய பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள் 16/11/2012. க்கு முன்பு) பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET லிருந்து முழுவதும் விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த அதிமுக அரசிடம் பலமுறை எடுத்துச் சென்றோம். 
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஆட்சிக் காலத்திய அரசாணைகளின் அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஒரே காரணத்தினால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக TET லிருந்து விலக்கு அளிக்காமல் விட்டுவிட்டனர். மிகுந்த இன்னலுக்கு ஆளாகிய பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் AIDED பள்ளி ஆசிரியர்கள் ஆட்சி விரைவில் மாற்றம் ஏற்படும், அப்போது நமக்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில் திமுக ஆட்சிக்காக இவ்வளவு வருடங்கள் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இன்று வரை தற்போதைய திமுக அரசும் எந்தவொரு தீர்வும் கொடுக்காமல் TET தேர்வை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர்   ஆகியோரின் கவனத்தில் மேலும் இந்த சிக்கலுக்கு தீர்வு காண பல்வேறு கோரிக்கை மனுக்கள் தற்போது பெறப்பட்டுள்ளன.

 எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்தில் ஒரு நல்ல முடிவு வரும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். அதற்கான முயற்சிகள் எங்கள் கூட்டமைப்பு எடுக்கும் எனவும் கூறினார். மேலும் 23/8/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட நிரந்தர பணியிட அரசு , அரசு உதவிபெறும் சிறுபான்மை , சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் குடும்பங்களில் பத்தாண்டு கால வேண்டுகோளை ஏற்று விடியல் ஏற்படுத்தித் தர திமுக அரசால் மட்டுமே இயலும் என்றும் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive