இல்லம் தேடி கல்வி - மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழு அமைத்தல், பணிகளை வரையறை செய்தல், மாதாந்திர சந்திப்புகள் நடத்துதல் மற்றும் மையம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுக்காக தன்னார்வலர்கள் அணுக வேண்டியவர்கள் - மாநில திட்ட இயக்குநரின் கடிதம். ( நாள் : 28.02.2022)
கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 11/2 மணிநேரம் ( மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் ) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடிக் கல்வி " எனும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
தற்போது 167188 இல்லம் தேடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன . இல்லம் தேடிக் கல்வி மையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் மற்றும் பலப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் 25.01.2022 அன்று நடைப்பெற்றது . இவ்வாலோசனைக் கூட்டத்தில் மாவட்ட குழு மற்றும் வட்டார குழு அமைப்பின் பணிகளை வரையற செய்ய கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது
ITK - SPD Proceedings - District & Block level committee.pdf
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...