இதற்காக முதன்முறையாக எமிஸ் இணையதளத்தில் பள்ளிகள் தேர்வு செய்யப்படவுள்ளது. இதனால் எந்த பள்ளிக்கு குழு ஆய்வுக்கு வருமோ என்ற 'திக் திக்' மனநிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பள்ளிகளில் இயக்குநர் ஆய்வு என்பது இதுவரை சி.இ.ஓ.,கள் தேர்வு செய்யும் பட்டியலில் உள்ள பள்ளிகளை மட்டும் ஆய்வு செய்வர். ஆய்வு குறித்து முன்கூட்டியே சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு தகவல் சென்று விடும். அங்கு அதிகாரிகளுக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்படும். ஆனால் கமிஷனர் நந்தகுமார் உத்தரவால் இம்முறை எமிஸ் மூலம் பள்ளிகள் தேர்வு செய்யப்படவுள்ளது. மதுரையில் இயக்குநர் லதா, இணை இயக்குநர்கள் அமுதவல்லி, உமா குழு ஆய்வு செய்கிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்படும் ஆசிரியர் பெயரும் எமிஸ் மூலம் தேர்வு செய்யப்படுகிறது என்றார்.
இது ரொம்ப தேவை இப்பொழுது. மாணவரகளை கண்டிக்க முடியாமல், ஆசுரியர்களின் கைகளைப கட்டிப்போட்டு விட்டு வேடிக்கை பார்ப்பது எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை என ஆசிரியரகள் கூறுவது காதில் விழுகிறதா ?
ReplyDelete