EMIS Portal- லில் நிதித் தொகுதியில் மாற்றங்கள் :
1. பெறப்பட்ட மொத்தத் தொகையில் 1/5 வரை ரொக்கமாக செலவழிக்கலாம்.
2. பள்ளிகள் ஜூன் 1 , 2021 முதல் இன்று வரை வருமானத்தைப் பதிவிடலாம் . தொகை , கணக்குத் தலைப்பு அல்லது தேதியில் பிழை ஏற்பட்டால் , இந்தத்தகவலைத் திருத்தலாம்.
3. வாங்கிய தேதியிலிருந்து 7 நாட்கள் வரை பள்ளிகள் தங்கள் விலைப்பட்டியலை பதிவேற்றலாம் . ஒரு முறை பதிவேற்றிய விலைப்பட்டியலைத் திருத்த இயலாது . விலைப்பட்டியல் விவரங்கள் தவறாக இருந்தால் , விலைப்பட்டியல் நீக்கப்பட்டலாம் மற்றும் புதிய விலைப் பட்டியலை பதிவிடலாம்.
4. பள்ளிகள் ஜூன் 1 , 2021 முதல் கொள்முதலுக்கான விலைப்பட்டியலைப் பதிவேற்றலாம் . தற்போதைய தேதியின் படி ஏழு நாட்களுக்கு முன்புள்ள செலவினங்களைப் பதிவு செய்ய AAM ( Audit & Accounts Management ) இன் ஒப்புதலை Invoice பெறுதல் அவசியம் . அதுவரை , விலைப்பட்டியல் நிலுவையில் உள்ளதாகக் குறிக்கப்படும்.
5. போதுமான ஆவணங்கள் இல்லாவிட்டால் , AAM விலைப்பட்டியலை ( குறிக்கப்பட்ட தேதிக்கு முன்பே ) , குறிப்புகளுடன் நிராகரிக்கலாம் . பள்ளிகள் இந்த விலைப் பட்டியலை நீக்கலாம் மேலும் AAM யின் கருத்துகளுக்கு ஏற்ப பதிய ஒன்றை பதிவேற்றலாம்.
6. பள்ளிகள் செலவினத்தையும் தேதியையும் மட்டும் திருத்தலாம் . எனினும் , கணக்குத் தலைப்பைத் திருத்த முடியாது . இது போன்ற பதிவிடலில் , பள்ளி செலவினத்துடன் இணைக்கப்பட்ட விலைப்பட்டியலை நீக்கி விட்டு புதிய ஒன்றை பதிவேற்றலாம் . பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் ( Utilization Certificate ) பெற்று மாவட்ட அளவில் தொகுத்து ( தொடக்க நிலை / இடைநிலை தனித்தனியாக ) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் மாநில திட்ட இயக்ககத்திற்கு 10.04.2022 -- க்குள் தவறாமல் rmsatamilns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கையொப்பமிடப்பட்டது அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...