திருக்குறள் :பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: இகல்
குறள் : 857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
பொருள்:
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்
பழமொழி :
Live within your means
வரவுக் கேற்ற செலவு செய்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன்.
2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.
பொன்மொழி :
உங்கள் கடந்த காலம் எவ்வளவு கொடியதாக இருந்தாலும் பிரச்சனை இல்லை.ஒரு புதிய தொடக்கத்தை தொடங்குங்கள்.___கௌதம புத்தர்
பொது அறிவு :
1. விலங்கினத்தில் அதிகளவு கோடை வெப்பத்தை தாங்கக்கூடிய விலங்கு எது?
ஆடு.
2. படகு தயாரிக்க பயன்படும் மரம் எது?
பைன் மரம்.
English words & meanings :
Bark - explosive cry of a dog, the stem of an old tree, நாயின் குரைப்பு, மரப்பட்டை.
Residence - a person's residing place or home, வசிப்பிடம்
ஆரோக்ய வாழ்வு :
இளநீரில் உள்ள பொட்டாசியம், எலக்ட்ரோலைட் குறைபாட்டை போக்கி வயிற்றுப் போக்கை சரி செய்ய உதவுகிறது. இதில் உள்ள எதிர்ப்பு சக்தி வைரஸ் நோய் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், குளிர்ச்சியை தருகிறது .கோடைக்கு ஏற்ற சத்தான பானம். மேலும் இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சசைன், ஃபோலேட் ஆகியவை இயற்கையிலேயே கிடைக்கிறது.
கணினி யுகம் :
Alt + = - Create a formula to sum all of the above cells.
Ctrl + ' - Insert value of above cell into current cell
மார்ச் 28
மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.
எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]
1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.
பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.
பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நீதிக்கதை
குகையில் தங்கம்
ஒரு காட்டில் ஒரு சாமியார் மூச்சுத்திணற ஓடிக் கொண்டிருந்தார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் ஓடுவதை அருகிலிருந்த மூன்று திருடர்களுக்கு வியப்பை உண்டு பண்ணியது. அவர்கள் சாமியாரைப் பிடித்து வந்து மூச்சுத்திணற ஓடியதன் காரணத்தைக் கேட்டனர். அதற்கு பயத்திலே நடுங்கி நின்ற சாமியார் தன்னைச் சாவு துரத்துவதாகக் கூறினார். திருடர்கள் சாமியாரைப் பைத்தியம் என்று எண்ணினர். அந்த சாவைக் காட்டுமாறு சாமியாரிடம் கூறினர்.
சாமியார் அவர்களை அழைத்துச் சென்று ஒரு குகையைக் காண்பித்தார். அந்த குகையில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் குகை நிறையத் தங்கம் இருந்தது. தங்கத்தைப் பகிர்ந்து கொள்ள திருடர்கள் எண்ணினர். ஆனால் அவர்களை பசி வாட்டியது. அவர்கள் தம்மில் ஒருவனை உணவு வாங்கி வர அருகில் உள்ள ஒரு நகருக்கு அனுப்பினர்.
அவன் உணவுடன் திரும்பியதும் இரு திருடர்களும் அவனைக் கொலை செய்தனர். ஏனெனில் தங்கம் முழுவதையும் தாங்களே கவர எண்ணினர். உணவு வாங்கி வந்த திருடனோ உணவில் நஞ்சு கலந்திருந்தான். அவனும் மற்ற இருவரைப் போலவே தங்கம் முழுவதையும் தானே அபகரிக்க விரும்பினான். நஞ்சூட்டப்பட்ட உணவு உண்ட திருடர்களும் மாண்டனர். தங்கம் பிழைத்தது. சாமியாரின் வாக்குப்பலித்தது.
நீதி :
பேராசை பெரு நஷ்டம்
இன்றைய செய்திகள்
28.03.22
🔖ஓசூர் வனக்கோட்ட பறவைகள் கணக்கெடுப்பு: 200 வகையான பறவைகளை கண்டறிந்து பதிவு செய்த வனத்துறையினர்.
🔖 மார்ச் 28, 29 பாரத் பந்த்: தமிழகத்தில் வன்முறையை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு.
🔖 போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் 2021-ல் நாடு முழுவதும் ரூ.1,898 கோடி அபராதம் வசூல்.
🔖 அணு ஆயுத போட்டியை தூண்டும் ரஷ்யா: தோஹா கூட்டத்தில் உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு.
🔖 பெண்கள் உலகக்கோப்பை : 3-வது அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து.
🔖 சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டி; இந்திய வீராங்கனை சிந்து வெற்றி.
Today's Headlines
🔖 In Hosur forest range, rangers started to take the Birds' statics: 200 kinds of birds are recognized and registered.
🔖To ban the violence during Bharat bandh on 28th and 29th mass police protection is given in Tamilnadu.
🔖 From those who provoke Traffic rules 1,898 crore rupees are taken as fine.
🔖 Russia is trying to induce Atomic weapon competition's among World countries - condemns Ukraine President in the Toha meet.
🔖 In the world women champion England got selected as 3rd team for the half eligibility test.
🔖 Swiss open tennis tournament Indian player Sindhu won the match.
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...