Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.03.22

  திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்:கூடா நட்பு

குறள் எண் : 832

குறள்:
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.

பொருள்:
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.

பழமொழி :

A single swallow can not make a summer


தனி மரம் தோப்பாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனித்துவமே மகத்துவம் எனவே எப்போதும் என் தனித் தன்மையை இழக்க மாட்டேன் 

2. எனது ஒலி உரக்க ஒலிக்க செய்வேன் பிறரின் எதிரொலியாக இருக்க மாட்டேன்

பொன்மொழி :

உண்மை என்பது ஒரு இனிமையான உணர்வு உண்மையின் அருமை தெரியாதவர்கள் இனிமையின் சுகத்தை உணராதவர்கள் அவர்கள்...புத்தர்

பொது அறிவு :

1. நாட்டிலேயே முதல் முறையாக எங்கு மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது? 

தூத்துக்குடி. 

2. இரண்டு முறை சுதந்திரம் பெற்ற நாடு எது? 

சைப்ரஸ்.

English words & meanings :

Miss the boat - missed an opportunity, வாய்ப்பை தவற விடுதல், 

a piece of cake - an easy thing, சுலபமான காரியம்

ஆரோக்ய வாழ்வு :

கொத்தமல்லியை தினமும் உணவில் அளவோடு சேர்த்துக் கொள்வது எலும்பு மற்றும் தசைகளுக்கு மிகவும் நல்லது. அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகை தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.



கணினி யுகம் :

Ctrl + Y - Redo the last action. 

Ctrl + Z - Undo the last action

நீதிக்கதை


குருவி கொடுத்த விதை

ஓர் ஊரில் பண்ணையார் ஒருவருக்கு அந்த ஊரில் இருந்த அனைத்து நிலங்களும் சொந்தமாக இருந்தது. அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்தான். அவனுக்கு சிறிய குடிசையும், கொஞ்ச நிலமும் இருந்தது. 

பண்ணையாரிடம் முனியன், ஐயா! உங்கள் அனைத்து நிலங்களில் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாக உள்ளது. என் நிலத்தில் விதைப்பதற்கு சிறிது தானியம் தாருங்கள் என்றான். 

சொந்தமாகப் பயிரிட வேண்டாம், என் நிலத்திலேயே உழுது பயிரிடு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும் என்று கோபத்துடன் சொன்னார் அவர். சோகத்துடன் வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம், நமக்கு தானியம் தரவில்லை. நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி என்று சொல்லி வருத்தப்பட்டான். 

அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியதை முனியனும், அவன் மனைவியும் பார்த்தனர். பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நாம் அதற்குத் தொல்லை செய்யக்கூடாது என்றான் முனியன். கூட்டில் அந்தக் குருவி நான்கு குஞ்சுகள் பொறித்தது. 

திடீரென்று அந்தக் குருவிக்கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்ததை பார்த்த குருவிக்குஞ்சுகள் கத்தியது, அதைக்கேட்ட உழவன் பாம்பை பிடித்துக் கொல்வதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் கால் ஒடிந்து இருந்தது. அதை அன்போடு எடுத்து அதற்குக் கட்டுப்போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்து உணவு கொடுத்து நன்கு பார்த்துக்கொண்டான். 

அந்தக் குருவியின் கால்கள் சரியானதும், அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் இருந்தனர். அச்சமயம் அவர்கள் வீட்டுக்கு அவன் வளர்த்த குருவி வந்தது. அவன் கையில் 3 விதையை கொடுத்து இதை உன் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றும், வீட்டின் முன்புறத்தில் ஒரு விதையையும், மற்றொரு விதையை வீட்டின் ஜன்னல் ஓரத்திலும் நட்டு வை. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது. குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான். 

மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின்பு, அந்த பூசணிக்காயை இரண்டு துண்டாக வெட்டிப்பார்த்தான். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக்காயை ஒன்று சேர்த்ததும். பழையபடி அது முழுப் பூசணிக்காய் ஆனது. 

இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு வேண்டும் என்றால் பிளந்தால் உணவு கிடைக்கும் என்றான். இதேபோல், மீதமுள்ள 2 பூசணிக்காயையும் பிளந்து பார்த்தனர். அதில், ஒன்றில் அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகளும், மற்றொன்றில் பொற்காசுகளும் இருந்தன. 

அதன் பிறகு முனியன் குடும்பம் பெரும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். இதனை அறிந்த பண்ணையார், உழவனிடம் முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று கேட்டார். 

அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான். அதை கேட்ட அவர் வீட்டில் மேல் பகுதியில் குருவிக்கூடு ஒன்றை அவரே செய்தார். ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கி நான்கு குஞ்சுகள் பொறித்தது. பாம்பு வரவே இல்லை. அதனால் அவரே, அந்த குருவிக்கூட்டை கலைத்து மூன்று குஞ்சுகளை கொன்றார். ஒரு குருவியின் காலை உடைத்துக் கீழே எறிந்தார். 

பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்து வேளை தவறாமல் உணவு அளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது. அவர் குருவி விதை கொடுக்கும் என்று எதிர்பார்த்தபோது, கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ஒன்றை வீட்டின் பின்புறமும், இரண்டாவதை வீட்டின் முன்புறமும், மூன்றாவதைக் கிணற்றோரமும் நடு என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது. மூன்று தானியங்களையும் நட்டார். 

மறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்து இருந்தன. மூன்று பூசணிக்காயையும் வெட்டினார். அதில் ஒன்றில் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வீணாக்கியது. பின்பு இரண்டாவதில் இருந்து தீ வெளிப்பட்டு அவரையும் அந்த மாளிகையையும் ஒரு நொடிக்குள் சாம்பல் ஆக்கியது. மூன்றாவதில் பாம்பு, தேள், பூரான் போன்றவை இருந்தன. அதன்பிறகு, தனது பேராசை தவறு என உணர்ந்தார் பண்ணையார். 

நீதி :
பொறாமை குணம் இருத்தல் கூடாது.

இன்றைய செய்திகள்

12.03.22

❗சென்னை தரமணியிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் முகாமை சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் துவங்கி வைத்தனர்

❗சென்னை: சிபிஎஸ்இ 10மற்றும் 12-ம் வகுப்பு 2-வது பருவத் தேர்வுகள் ஏப்.26 முதல் தொடக்கம் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கூறியுள்ளார்.

❗திண்டுக்கல் : நெகிழி பைகள் வேண்டாம் மஞ்சள் பை வியாபாரிகளுக்கு அதிகாரிகள் விநியோகித்து விழிப்புணர்வு.

❗சேலம்: சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு விமான சேவை தொடங்குவது குறித்து சேலம் எம்.பி. ஆலோசனை கூட்டத்தில் முடிவு

❗ஜம்மு காஷ்மீரின் குரேஸ் அருகே இந்திய ராணுவத்தில் பயன்படுத்தி வந்த சீட்டா ரக ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது

❗மும்பை: முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்த லசித் மலிங்கா மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

Today's Headlines

❗In the Chennai Taramani Corporation School, Chennai Mayor and Assistant Mayor started the scheme "save before it comes"

❗ In CBSCE schools for 10th and 12th, 2nd term exams will start from April 26th announced by the controller of examination

❗ Dindigul: officials encourage business people not to use plastics by distributing yellow bags

❗ Salem : it is decided in the Salem MP meeting to start the air service from Salem to Chennai

❗ Near Kures at Jammu Kashmir a helicopter met with an accident

❗ Mumbai: the leading fast bowler Lasith Malinga gives entry again in the IPL series
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive