திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: கூடா நட்பு
குறள் எண் :825
குறள் :
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று
பொருள்:
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று
பொருள்:
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.
பழமொழி :
The spinning world makes everything rotate.
சுழலும் உலகம் அனைத்தையும் சுழற்றுகிறது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. தனித்துவமே மகத்துவம் எனவே எப்போதும் என் தனித் தன்மையை இழக்க மாட்டேன்
2. எனது ஒலி உரக்க ஒலிக்க செய்வேன் பிறரின் எதிரொலியாக இருக்க மாட்டேன்
பொன்மொழி :
தொழில் எத்தனை கீழ்த்தரமானாலும் அதைச் செய்வதில் அவமானம் ஒன்றும் இல்லை. சோம்பேறியாகத் திரிவதுதான் அவமானம்.”...பெரியார்
பொது அறிவு :
1.பாம்புகளே இல்லாத கடல் எது?
அட்லாண்டிக் கடல்.
2. ஒரு மின்னலின் சராசரி நீளம் எவ்வளவு?
6 கி.மீ.
English words & meanings :
Dig in my heels - very stubborn, பிடிவாதம்.
Freak out - scared, பயந்து விடுதல்
ஆரோக்ய வாழ்வு :
தயிரில் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் உள்ளன. இவை உடலுக்கு புத்துயிர் தந்து சோர்வை விரட்ட உதவுகின்றது. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் உங்கள் செரிமான அமைப்பை சீர் செய்கின்றது. எனவே தினம்தோறும் ஒரு கப் தயிரை உட்கொள்வது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கோடை காலத்திற்கு தயிரை உட்கொள்வது மிகவும் நல்லது
கணினி யுகம் :
Ctrl + D - Bookmark the current page in most internet browsers.
Ctrl + N - Open a new tab in most internet browsers
நீதிக்கதை
முரட்டு ஆடு
ஒரு மலையடிவாரம் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதனால், அங்கே மலையடிவாரத்தில் பச்சைப்பசேல் என்று புல் வளர்ந்திருந்தது.
அவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை. அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும்.
ஒரு நாள் ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து பயந்து தப்பி ஓடி முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது. முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம் என்று கோபமாகக் கேட்டது. அதற்கு அந்த ஆடு, அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன் என்று அமைதியாக சொன்னது.
முரட்டு ஆடோ, அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டைப்போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சமாதானமாகவே பேசியும், முரட்டு ஆடு கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று சண்டையிட்டது.
மலைச்சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி ஆற்றில் விழுந்தது. ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக்கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டது.
நீதி :
தான்தான் பெரியவன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம், திமிரு இருந்தால் நஷ்டம் நமக்கே.
இன்றைய செய்திகள்
09.03.22
◆தஞ்சாவூர் மாவட்டம் தோழகிரிப்பட்டியில் வகுப்பறையுடன் கூடிய ஸ்மார்ட் அங்கன்வாடி மையத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார்.
◆மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாம் ஆண்டு உலகப் போர் காலத்தில் அமைக்கப்பட்ட பதுங்குக் குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை அருங்காட்சியமாக மாற்ற கல்லூரி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
◆இந்தியாவில் கல்வித்துறையில் செலவழிக்காமல் விடப்பட்ட தொகை ரூ.36,657 கோடி - கல்வியாளர்கள் அதிர்ச்சி.
◆நாடு முழுவதும் அங்கீகாரத்தை புதுப்பிக்காத 97 கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) உத்தரவு.
◆202 பள்ளிகள், 34 மருத்துவமனைகள், 1500 குடியிருப்புகள் சேதம்: ரஷ்ய ராணுவம் மீது உக்ரைன் குற்றச்சாட்டு.
◆ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.
◆பெண்களுக்கான உலக பாரா-பேட்மிண்டன் தரவரிசை; முதலிடம் பிடித்தார் இந்தியாவின் மானசி ஜோஷி.
Today's Headlines
School Education Minister Anbil Mages Poyamozhi yesterday inaugurated the Smart Anganwadi Center with a classroom in Tohagiripatti, Thanjavur district.
A bunker set up during the First World War has been discovered at the American College, Madurai. The college administration has decided to turn it into a museum.
◆ Rs 36,657 crore left unspent in education in India - Educators shocked.
All India Council for Technical Education (AICTE) orders closure of 97 colleges across the country for non-renewal of accreditation.
Damage to 202 schools, 34 hospitals, 1500 apartments: Ukraine blames Russian military.
German Open Badminton: Sindhu, Srikanth advance to next round.
World Para-Badminton Rankings for Women; India's Manasi Joshi topped the list.
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...