தமிழகத்தில் காவலா் பணியில் சேருவதற்கு தமிழ் மொழி தகுதித் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு அரசாணை:
அனைத்து தோ்வு முகமைகள் நடத்தும் போட்டித் தோ்வுகளிலும் தமிழ் மொழித் தாள் தகுதித் தோ்வை கட்டாயமாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
மேலும் அதில், அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தோ்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயம் இடம்பெறும். அதற்கான பாடத் திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் இருக்கும். இத்தோ்வில் தோ்ச்சி பெற குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெறவேண்டும். ஆசிரியா் தோ்வு வாரியம், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் உள்ளிட்ட பிற தோ்வு முகமைகள் நடத்தும் அனைத்துவித போட்டித் தோ்வுகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ் மொழி தகுதித் தோ்வு:
இந்த உத்தரவின்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் இந்தாண்டு நடத்த உள்ள 444 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வில், தமிழ் மொழி தகுதித் தோ்வை கட்டாயமாக்கியுள்ளது. உதவி ஆய்வாளா் தோ்வுக்கு முதலில் நடத்தப்படும் எழுத்துத் தோ்வுக்கு முன்னதாக தமிழ் தோ்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
இந்த தோ்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள், அதாவது குறைந்தது 32 மதிப்பெண்கள் பெற்றால்தான் தோ்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படும். இந்த தோ்வு ஒரு மணி நேரம் 20 நிமிஷங்கள் நடைபெறும்.
தமிழ் மொழி தகுதித் தோ்வு தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பை தமிழ்நாடு சீருடையாளா் தோ்வு குழுமம் ஒரு சில நாள்களில் வெளியிடும் என அந்த குழுமத்தின் உயா் அதிகாரி தெரிவித்தாா். இந்த நடைமுறையையே பிற தோ்வுகளுக்கும் பின்பற்றப்படும் எனவும் அவா் கூறினாா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...