திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியரான திரு. அ.ஷாஜஹான் என்பவர் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் போது பள்ளி சுத்தம் சுகாதாரம் புதுமைப்பள்ளி விருது பெற்று பெருமை சேர்த்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்கள் இடைநின்றல் குறைக்கும் வகையில் மகிழ்வூட்டும் வகுப்பறையாக கலகல வகுப்பறையாக பொம்மலாட்டம் மற்றும் நாட்டுப்புறககலைகளான ஒயிலாட்டம், கும்மியாட்டம் வழியாக கற்றல் கற்பிக்கும் பணிகளாக மாற்றி பள்ளிக்கு வராத மாணவர்களையும் பள்ளிக்கு வர வைக்கிறார்..இவர் விடுமுறை நாட்களில் பன்னாட்டு அளவில் கலை ஆர்வலர்களை இணையவழிகளில் சங்கமிக்க செய்து கலைகளை வளர்த்தும் பரப்பிக்கொண்டும், தமிழ் ஆர்வலராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்து பணி செய்தமைக்காக இலட்சிய ஆசிரியர் விருது, நாட்டுப்புற கலைஞர் விருது, சிறந்த கவிஞர், சிறந்த சமூக ஆர்வலர் விருதுகள் என 205 மேற்பட்ட விருதுகள் மற்றும் 250 மேற்பட்ட பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணி அறப்பணி அதை நீ அற்பணி என்பதற்கு இலக்கணமாக திகழ்கிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...