Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுநிலை ஆசிரியர் தேர்வில் தடுப்பூசி போட்டால்தான் அனுமதி

 

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியில் 2207 இடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க நாளை மறுநாள் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் கல்வி வாரியமான டி.ஆர்.பி. சார்பில் இந்த தேர்வு கணினி வழியில் நடத்தப்படுகிறது. 

மாநிலம் முழுதும் 160 முதல் 180 மையங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2.6 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் 'தேர்வு எழுத வருவோர் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்தியிருக்க வேண்டும். 'ஊசி செலுத்தாதவர்கள் தேர்வு நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா சோதனை செய்த சான்றிதழ் எடுத்து வர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு பள்ளிக் கல்வி துறை மற்றும் டி.ஆர்.பி.க்கு தேர்வர்கள் இ- - மெயில் அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து 'நெட் செட்' பட்டதாரிகள் சங்க செயலர் தங்கமுனியாண்டி கூறியதாவது:இதற்கு முன் நடந்த எந்த தேர்விலும் இந்த கட்டுப்பாடு இல்லை. டி.ஆர்.பி. மட்டுமே திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது. தேர்வுக்கான அறிவிக்கையிலும் குறிப்பிடவில்லை. எனவே தேர்வர்கள் பாதிக்காத வகையில் இந்த கட்டுப்பாடுக்கு தளர்வு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.





1 Comments:

  1. இது வெரும் ஒற்றை மருத்துவ தினிப்பிற்க்கான முயர்ச்சியே தவிர வேரு ஒன்றுமில்லை. பொருப்பற்ற அதிகாரிகளின் தன்னிச்சயான-இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்க்குப் புறம்பான இதுபோன்ற அறிவிப்புக்களை மக்கள் அலச்சியம் செய்வதே நலம். கடந்த ஜனவரி 13இல் நமது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தடுப்பூசி ஒருவறின் சுய விருப்பம் சாற்ந்ததே தவிர கட்டாயமில்லை-நாங்கள் யாரையும்ா கட்டாய படுத்தவுமில்லை என்ற கருத்தை பதிவு செய்துள்ளது. எனவே, தேர்வர்கள் அன்பு கூற்ந்து தேர்வில் மட்டும் கவனம் செலுத்துங்கள், தான் தோன்றித்தனமாக சில அதிகாரிகள் பதவி மோகத்தில் போடும் இந்திய அரசியலமைப்புச் சட்டதிற்க்குப் புறம்பான உத்தரவுகளைக் கண்டு பயம்கொள்ளவேண்டாம்! தடுப்பூசி அலோபதி மருத்துவத்தின் ஒரு பிறிவு. தடுப்பூசியை தினிப்பது அலோபதி மருத்துவத்தை தினிப்பதற்க்குச் சமம். எந்த ஒரு தனிநபர் மீதும் ஒரு மதத்தையோ, ஒரு உணவயோ தினிப்பது எந்தளவிற்க்கு தவரோ-அடிப்படை உறிமை மீரலோ, அதேபோல்தான் தடுப்பூசி, பரிசோதனை போன்ற முழுமை பெராத அறிவியல் கண்டுபிடிப்புக்கலை பொது சுகாதரம் என்றப்பெயரில் தினிப்பதும் தவரு. புறிந்துகொள்வோம், வெரும் மதம் சாற்ந்த நம்பிக்கைகள் மட்டும் நமது உறிமை அல்ல, நமக்கு எந்த மருத்துவ முறை சிரந்தது என்பதை முடிவுசெய்வதும் நமது உறிமையே. எத ஒரு அரசு-தனியார் நிருவனம் இதுபோன்ற தினிப்புக்களை விதித்தாலும் இது மனித உறிமை மீரலே...
    2000 வருட மொழிப்பாரம்பரியம் கொண்ட தமிழனுக்கு மருத்துவ அறிவு கிடையாதா?
    *விழித்துக்கொள்வோம், விழிப்புணர்வு அடைவோம்*
    ---
    வாழ்த்துகள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive