கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க, வரும் 28ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2021ம் ஆண்டுக்குரிய முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு, தனியார் மற்றும் நிறுவனத்திடம் இருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருட்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு விண்ணப்பிக்க, ௨௦௨௧ டிச., 31 கடைசி நாளாக இருந்தது; பின், ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. தற்போது விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2018, 2019, 2020ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, தமிழ் வளர்ச்சித் துறையின், www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை, 'தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...