Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.02.22

    திருக்குறள் :

குறள் - 816, 
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும். 

பொருள் - அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்

பழமொழி :

Talking more is not wisdom.


அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல.

இரண்டொழுக்க பண்புகள் :

1வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

தன்னம்பிக்கை இல்லாதவன்
வெற்றி பெறுவது கடினம்..
அசைக்க முடியாத
தன்னம்பிக்கை கொண்டவன்
வீழ்வது அரிது....அம்பேத்கர்

பொது அறிவு :

1.உலகின் பெரிய ரயில்நிலையம் எது? 

நியூயார்க் (கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்). 

2. எந்த நாடு ஆண் - பெண் இருவருக்கும் சம ஊதியம் வழங்க சட்டம் இயற்றியுள்ளது?

 ஐஸ்லாந்து.

English words & meanings :

Brief - short, சுருக்கமாக, 

caution - careful - கவனமாக

ஆரோக்ய வாழ்வு :

தினமும் 8- 10 பாதாம் சாப்பிடுவதால் அதில் உள்ள அமினோ அமிலம் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் தோலை நீக்கிவிட்டு, தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக இருக்கும். பாதாமின் தோலில் உள்ள டேமின் என்ற வேதிப்பொருள், செரிமானத்தை பாதிக்கும் என்பதால் தோலுடன் உண்ண வேண்டாம்.

கணினி யுகம் :

Ctrl+shift+> - increase the font size, 

ctrl+shift +< - decrease the font size

பிப்ரவரி 28


தேசிய அறிவியல் நாள்




தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.[3]

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

நீதிக்கதை


வளைந்த நாணல்

ஒரு நாள் தென்றல் காற்று வீசியது. தோட்டத்திலுள்ள மரங்கள், புற்களையும், நாணலையும் பார்த்து, சிறு தென்றல் காற்று வீசியதற்கே பலமற்றுப் போய் அசைந்து கொடுக்கிறாயே? என்று ஏளனமாகப் பேசி சிரித்தன. 

அடுத்தநாளே தோட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்று பலமாக வீசியதால் தோட்டத்தில் இருந்த மரங்கள் ஒவ்வொன்றாக முறிந்து விழுந்தன. அப்போது நாணல், மரங்களே! நீங்களும் என்னைப் போல் வளைந்து கொடுக்கப் பழகியிருந்தால் இப்படி வேரோடு சாய்ந்திருக்க மாட்டீர்கள்!

எங்களைப் பார்த்து ஏளனமாக கேலி பேசினீர்களே! நாங்களும் உபயோகமானவர்கள் தான். நாங்கள் ஆற்றுநீர் கரையை அரிக்காமல் தடுப்பதால்தான், நீங்களெல்லாம் கம்பீரமாக நிற்க முடிகிறது. இல்லையேல் கம்பீரமாக நிற்க முடியாது. அதேபோல் உருவத்தில் சிறியதாக இருக்கும் எறும்பு, தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தால் உருவத்தில் பெரிய யானையாலும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்றது.

நாணல் பேசியதை கேட்டு மரங்களால் எதுவுமே பேச முடியவில்லை. அப்போதுதான் மரங்கள் உருவத்தில் சிறியதாக இருந்த நாணலைப் பார்த்து அலட்சியமாகப் பேசியது தவறு என்பதைப் புரிந்து கொண்டன.

நீதி :
ஒருவரையும் ஏளனமாகப் பேசக்கூடாது.

இன்றைய செய்திகள்

28.02.22

✔கல்வியில் சிறந்த மாநிலம் என்ற பட்டம் போதாது, ‘உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழகம்’ என்ற பட்டத்தைப் பெறவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

✔ மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம்: ரூ.5 கோடி செலவில் அமைக்க தமிழக அரசு அனுமதி.

✔ ரூ.12,000 கோடி வருவாயைக் கடந்த பதிவுத்துறைக்கு, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

✔ உக்ரைன் நகரங்களுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதலை துரிதப்படுத்தி உள்ள நிலையில் கீவ், கார்கிவ் நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

✔ சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு கூடுதல் வரி: நிதி ஆயோக் ஆலோசனை.

✔ ரஷ்ய ராணுவ நடவடிக்கை 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அறிவுறுத்த வேண்டி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

✔ பல்கேரியாவில் நடந்து வரும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

✔ கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார்பந்தயப் போட்டியில் சென்னை வீரர் முதலிடம் பிடித்தார்.

Today's Headlines

 ✔ Chief Minister MK Stalin has advised that the title of 'Best State in Education' is not enough, we need to get the title  'A state Best in Higher Education and Research Education' also. 

 ✔ India's first sea cow sanctuary in the Gulf of Mannar, in the Bagh Strait, approved by the Government of Tamil Nadu at a cost of Rs 5 crore.

 ✔ The Minister of Commercial Taxes and Registration of Tamil Nadu has applauded the registration department for its revenue of Rs 12,000 crore.

 ✔ The Indian embassy in Ukraine has advised Indians in Kyiv and Kharkiv not to leave Ukrainian cities as Russian forces intensify their fight.

 ✔ The extra tax on foods high in sugar and salt: Financial ayog advice.

 ✔ Ukraine has appealed to the International Court of Justice (ICJ) to instruct Russia to end the war as Russian military action reaches its 4th day.

 ✔ India wins bronze at an international boxing tournament in Bulgaria

 ✔ The Chennai player took the first place in the national level car race held in Coimbatore.
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive