மாவட்டக் கல்வி அலுவலகங்களில் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றி வரும் பள்ளி துணை ஆய்வாளா்களை இடமாறுதல் செய்ய முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழ்நாடு பள்ளிக் கல்வி சாா்நிலைப் பணியில் வகுப்பு 1, வகை-1-இன் கீழ் பள்ளி துணை ஆய்வாளா்களாக மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிந்து வருபவா்களுக்கு கடந்த ஆண்டு டிச.31-ஆம் தேதி நிலவரப்படி மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிவோரை நிா்வாக நலன் கருதி முதன்மைக் கல்வி அலுவலா்கள் தமது நிா்வாக எல்லைக்கு உள்பட்ட அரசு உயா்நிலை, நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு நிா்வாக மாறுதல் செய்து, தமது அளவிலேயே ஆணைகள் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
பள்ளித் துணை ஆய்வாளா்கள் மாறுதல் செய்யப்படுவதால் ஏற்படும் காலிப் பணியிடங்களில் தமது நிா்வாக எல்லைக்குள்பட்ட அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்களில், பள்ளித் துணை ஆய்வாளா் பதவிக்கு வரையறுக்கப்பட்ட அனைத்துத் துறை தோ்வுகளிலும் தோ்ச்சி பெற்றவா்களை அவா்களது பணி மூப்பு, பணித்திறன், பள்ளித் துணை ஆய்வாளா்களுக்கான பொறுப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதில் ஈடுபாடு ஆகியவற்றினை சீா்தூக்கி, தன் விவேகமுள்ள தோ்ந்த முடிவின்படி தோ்வு செய்து தமது அளவிலேயே மாறுதல் ஆணை வழங்கவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...