ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை கோடைவிடுமுறையில் நடத்த வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை..
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
EMIS என்னும் இணைய தளத்தின் வழியே விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யச் சொல்லி ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன ஆனால் EMIS தளத்தில் இதுவரை சரியான உள்ளீடுகள் ஏற்படுத்தப்படாததால் பல்வேறு வகையான குழப்பங்கள் ஆசிரியர்கள் மத்தியில் இன்னும் நிலவி வருகிறது.
அதேபோல ஆசிரியர்கள் இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் , பதிவிறக்கம் செய்து, உரிய அலுவலரிடம் ஒப்படைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உள்ளன.
மேலும் 10 11 12 ஆகிய மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத இருக்கும் சூழலில் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று,
வேறு பள்ளிகளுக்குச் செல்லும் பொழுது மாணவர்களுடைய கல்வி பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
பள்ளிகள் சரிவர இயங்காமல் இருக்கும்சூழலில்,
ஆசிரியர்களின் மாற்றம் என்பதும் மாணவர்களின் கல்வியைப் பொதுத்தேர்வு எழுதும் சூழலில் கண்டிப்பாக பாதிக்கும்.
கோடை விடுமுறையில் நடத்துவதன்மூலம் இடையில் பணி ஓய்வு பெறுபவர்களுடைய காலிப்பணியிடத்தையும் கணக்கில்கொண்டு, அப்பணியிடங்களிலும் ஆசிரியர்களைக் கலந்தாய்வின்மூலம் நிரப்ப கூடுதல் வாய்ப்பு ஏற்படும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
அவசியம் ஏற்பட்டால், நிர்வாக அடிப்படையிலான மாறுதல்களை மட்டும் தற்போது வழங்கி, மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நிறைவு பெற்றவுடன், கொரோனோ பெருந்தொற்றின் தாக்கமும் சற்று குறைந்தவுடன் கோடை விடுமுறை காலமான மே மாதத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்துவது என்பதே சரியானதாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் தற்பொழுது கலந்தாய்விற்கான ஏற்பாடுகளில் அவசரம் காட்டாமல், கலந்தாய்வை கோடை விடுமுறையில் ஒத்திவைக்குமாறு கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் சார்பாக பணிவுடன் தமிழ்நாடு அரசையும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்
சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்
last two years we have been waiting for transfer, it is worthy to delay the process...?
ReplyDeleteதற்போது அரசு கலந்தாய்வு நடத்துவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை... கோடை விடுமுறையில் 10 11 12 ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மற்றும் விடைத்தாள் மதிப்பீடு பணிகள் இருக்கும்பட்சத்தில் எப்படி கலந்தாய்வு நடத்த சொல்கிறீர்கள் ... அரசு ஆசிரியர்களுக்கு நல்லது செய்தால் ஏன் நீங்கள் தடை செய்கிறீர்கள்.. பல ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் வெளிமாவட்ட ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் வருவதற்கு.. நீங்கள் தடையாக இருக்க வேண்டாம்... சங்கங்கள் மற்ற பணிகள் எவ்வளவோ உள்ளது அதில் அதிக கவனம் செலுத்தி உதவுங்கள்... நன்றி..
ReplyDeleteYes it's correct
ReplyDeleteஇதில் கல்வியாளர் சங்கம் தவறாக நினைக்கிறது பணிமாறுதல் பதவிஉயர்வு நடந்தால் மீதி காலி பணியிடத்திற்கு உடனே புதியவருக்கு வேலை கிடைக்கும் அனைத்து மாணவருக்கும் ஆசிரியர்கள் கிடைபார்கள் பல பள்ளியில் மாணவர்கள் அதிகம் சேர்ந்து ஆசிரியர் இல்லாமல் கற்றல் பணி பாதிக்கிறது இதை சரி செய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் கலந்தாய்விற் க்கு உடனே நடத்த உத்தரவ பிறப்பித்தள்ளார் தயவு செய்து சங்கம் முட்டுகட்டை போடாதிர்கள்
ReplyDeleteSupplying service
ReplyDeleteபணி இட மாறுதல்,பதவி உயர்வு கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் தயாராக உள்ளார்கள் .சங்கம் சற்று பொறுமை காக்கவும்
ReplyDelete