தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நோய் பாதிப்பின் தாக்கம் மற்றும் , உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன.
நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 39 வாரங்கள் அல்லது 9 மாதங்கள் கடந்தவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் எனவும், ஆன்லைன் மற்றும் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று பதிவு செய்து பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், முன்பு எந்த தடுப்பூசி போடப்பட்டதோ, அந்த ஊசி தான் பூஸ்டர் டோசில் போட முடியும் என்றும் முதலில் கோவாக்சின் போட்டு கொண்டவர்களுக்கு , கோவாக்சினும், கோவிஷீல்டு போட்டு கொண்டவர்களுக்கு கோவிஷீல்டும் தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...