தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண் 25154/அ1/இ2/2021 நாள் 30.12.2021 ன் படி தொடக்கக் கல்வியில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு உட்படுத்தப்பட்டு 24/01/2022 ஒன்றியத்திற்குள் பணி நிரவல் தொடர்ந்து ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் தொடர்ந்து 25/01/2022 வருவாய் மாவட்டத்திற்குள் பணி நிரவல்ஸசெய்யப்பட்ட பின்னர் ஒன்றியத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வும் அதன் பின்னர் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தொடக்கக் கல்வியை பொருத்தவரையில் பதவி உயர்வு முன்னுரிமை ஒன்றியத்திற்கு உள்ளாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஒன்றியத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மாறுதலும் பதவி உயர்வும் வழங்கப்பட்ட பின்னரே பணிநிரவல் மேற்கொள்வது இன்றியமையாததாகும் ஏனெனில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பணியிடங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் எதிர்காலத்தில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எனவே ஒன்றியத்திற்கு உள்ளாக முன்னுரிமை நிர்ணயிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு பணியிடங்கள் பணிநிரவலில் நடக்கக்கூடாது. அவற்றையும் பதவி உயர்வில் நிரப்பப்பட வேண்டும் அவ்வாறு நிரப்பப்படாத பட்சத்தில் வேண்டுமானால் தகுந்த ஆட்கள் ஒன்றியத்தில் கிடைக்கப்பெறாத சூழலில் அப் பணியிடங்களை பணி நிரவலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கான திருத்தங்களை ஆணையர் அவர்கள் வெளியிட வேண்டும் என்று ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...