2021-2022ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
வழக்கறிஞரின் சட்டக்கருத்துப்படி ஆசிரியர் பயிற்றுநர் நிலையில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெற வழக்கு தொடர்ந்து வழக்கு தீர்ப்பாணை அடிப்படையில் பணி மாறுதல் பெற பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் நடைபெறவுள்ள ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்து கொள்ளலாம் என அறிவுரை வழங்கப்பட்டதை தொடர்ந்து மேற்கண்ட வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டும் நடைபெறவுள்ள கலந்தாய்வில் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 12.01.2022 தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேற்படி மாறுதல் விண்ணப்பங்கள் சார்பாக கல்வி தகவல் மேலாண்மை முகமை ( EMIS online ) யில் 12.01.2022 அன்று பிற்பகல் 5 மணி வரை ஆசிரியர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளவும் , அதன் பின்னர் மேற்கண்ட விண்ணப்பங்களை தலைமையாசிரியர் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் ( Approval ) செய்வதற்கு 13.01.2022 அன்று பிற்பகல் 5 மணி வரை இணையதளத்தில் பரிசீலிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதனை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...