பிப்ரவரி 1 முதல் 15 வரை கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் என சென்னை ஐஐடி அறிக்கை!
உலக அளவில் கடந்த மாத இறுதியில் இருந்தே கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது.
இந்திய அளவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்த சென்னை ஐஐடி தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 15 வரை கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் என்றும் அதன்பிறகு படிப்படியாக குறையத் தொடங்கும் எனவும் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். எனவே பொதுமக்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் உரிய முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி பாடசாலை அறிவுறுத்துகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...