திருக்குறள் :பால்: பொருட்பால்
இயல்: அரணியல்
அதிகாரம்: நாடு
குறள் எண்: 735
குறள்:
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு
பொருள்:
பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும்
பழமொழி :
You waited this much, wait just a bit more.
ஆக்கப் பொறுத்தவருக்கு ஆறப் பொறுக்கவில்லை
இரண்டொழுக்க பண்புகள் :
1. ஒலியாக இருக்க வேண்டும் எதிரொலியாக அல்ல எனவே எனது தனித்தன்மை எப்போதும் இழக்க மாட்டேன்.
2. ஆயத்தமே ஆயுதம் எனவே எப்போதும் எந்த காரியம் செய்யும் முன்பும் ஆயத்தமாகி செல்வேன்
பொன்மொழி :
நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புக்காக காத்திராதே வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்___அப்துல் கலாம்
பொது அறிவு :
1. 2022 ல் 22 வது உலக கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைப்பெற உள்ளது?
கத்தார்.
2. கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை கடைப்பிடித்த இந்திய நாட்டின் முதல் மாநிலம் எது?
தமிழ்நாடு.
English words & meanings :
Quiet - silence. அமைதி
Quite - very (the exam is quite hard). முற்றிலும்.
ஆரோக்ய வாழ்வு :
*டார்க் சாக்லேட்டின் நன்மைகள்*
1) டார்க் சாக்லேட்டில் புற்றுநோய் எதிர்ப்பு ஆன்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் உள்ளது.
2) டார்க் சாக்லேட் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
ஜனவரி 03
சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாள்
சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.[1][2]
சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது
நீதிக்கதை
தங்கமா? வெள்ளியா?
ஒரு நாட்டில் பொருளாதார நிபுணர் ஒருவர் இருந்தார். அந்த நாட்டு மன்னர் எந்த ஒரு முக்கியமான காரியத்தை செய்வதாக இருந்தாலும், அந்த நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்ட பிறகே செய்வார். அவரின் புகழ் மற்ற நாடுகளுக்கும் பரவியது.
ஒரு நாள் பொருளாதார நிபுணரை, அவர் வசிக்கும் ஊரின் தலைவர் அழைத்து, நீ நாட்டுக்கே பொருளாதார விஷயங்களில் ஆலோசனை வழங்குகிறாய். ஆனால் உன் மகனை கவனிக்காமல் விட்டுவிட்டாயே. அவனுக்கு உலோகத்தில் அதிக விலை மதிப்பானது தங்கமா? அல்லது வெள்ளியா என்று கூட தெரியவில்லையே. நாட்டு விஷயங்களை கவனித்தது போதும், வீட்டையும் கொஞ்சம் கவனி என்று கூறினார்.
வீட்டிற்கு வந்த நிபுணர், தனது மகனை அழைத்து, மகனே.. உலோகத்தில் விலை மதிப்பானது தங்கமா? வெள்ளியா? என்று கேட்டார். அதற்கு அந்த மகன் தங்கம் என்று பதிலளித்தான். உடனே, தந்தை பிறகு ஏன் இந்த ஊர் பெரியவர்கள் உன்னைப் பற்றி என்னிடம் புகார் கூறினார்கள். உன்னை நான் சரியாக வளர்க்கவில்லை என்றும், தங்கத்திற்கும், வெள்ளிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூட அவன் அறிந்திருக்கவில்லை என்று என்னிடம் சொன்னார்கள் என்று சந்தேகத்துடன் கேட்டார்.
அதற்கு அந்த மகன், தந்தையே, தினமும் நான் பள்ளிக்குச் செல்லும் போது, உங்களிடம் என்னைப் பற்றி சொல்லிய பெரியவர்கள், என்னை அழைத்து ஒரு கையில் வெள்ளி நாணயங்களையும், ஒரு கையில் தங்க நாணயத்தையும் வைத்துக் கொண்டு, இதில் எது பெரியதோ அதை நீ எடுத்துக் கொள் என்று கூறுவார்கள்.
நான் உடனே வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொள்வேன். அவர்கள் கலகலவென்று சிரிப்பார்கள். நான் வெள்ளி நாணயத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று விடுவேன் என்றான். இதைக் கேட்டு அதிர்ந்த நிபுணர், வெள்ளியை விட தங்கம்தான் விலை உயர்ந்தது என்று உனக்குத் தெரிந்திருந்தும் ஏன் வெள்ளியை எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு அந்த மகன், தந்தையை தனது அறைக்கு அழைத்துச் சென்று, ஒரு பெட்டியைத் திறந்து காண்பித்தான். அந்த பெட்டி நிறைய வெள்ளி நாணயங்கள் இருந்தன. அப்போது மகன் சொன்னான், தந்தையே, ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னிடம் தங்க, வெள்ளி நாணயங்களை காண்பிக்கும் போதும் நான் வெள்ளி நாணயங்களையே எடுத்துக் கொள்வேன். அதனால்தான் என்னிடம் இவ்வளவு வெள்ளி நாணயங்கள் இருக்கின்றன. நான் எப்போது தங்க நாணயத்தை தேர்வு செய்கிறேனோ அன்றுடன் இந்த ஆட்டம் நின்று போகும். அவர்களை ஆட்டத்தில் வெற்றி பெற விட்டு விட்டு, நான் நிஜத்தில் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். இந்த பதிலைக் கேட்டதும் ஆனந்தம் அடைந்தார் தந்தை.
நீதி :
புத்திசாலிகளுக்கு என்றுமே வெற்றிதான்.
இன்றைய செய்திகள்
03.01.22
★தென்தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை: மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை.
★தமிழகத்தில் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் இணைந்து மூன்றாவது அலையை ஏற்படுத்திவருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
★நேரடி நியமன குளறுபடியால் 16 மாவட்டக் கல்வி அதிகாரிகள் பதவியிறக்கம்.
★நம்பகத்தன்மைமிக்க பணியாளர்களில் மருத்துவர்கள் முதலிடம்; நம்பகமான நாடுகளில் இந்தியாவுக்கு 2-ம் இடம்: சர்வதேச கருத்துக் கணிப்பில் தகவல்.
★கரோனா வைரஸில் தொடங்கி ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான், டெல்மைக்ரான் என வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. உலக அளவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அடுத்த வைரஸ் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஃப்ளோரினா என பெயரிட்டுள்ளனர்.
★12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் ஒரே நாளில் நடைபெற்ற 3 ஆட்டங்களும் ‘டை’ யில் முடிந்துள்ளது.
★ஐ.எஸ்.எல் கால்பந்து : சென்னை - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதல்.
★இந்திய கிரிக்கெட் அணி 2022 ஆம் ஆண்டு விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்களின் முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
Today's Headlines
★ Heavy rain in the south today and tomorrow: Fishermen warned not to go to sea.
★ Minister of Public Welfare Ma Subramanian has said that Delta and Omicron virus is causing the third wave in Tamil Nadu.
★ 16 District Education Officers sacked due to a direct appointment scam.
★ The prevalence of delta virus in India is declining and omega is increasing: Federal Government Information.
★ Physicians rank first among reliable staff; India ranks 2nd among trusted countries: Information in International Poll.
★ Starting with the corona virus, the virus transforms into alpha, beta, gamma, delta, omicron, telmicron. The next virus to be detected in Israel is the omega virus, which is threatening to spread rapidly worldwide. This is called Florina.
★ The 8th Pro Kabaddi League match involving 12 teams is going on in Bangalore without fans. All the 3 matches played on the same day ended in a tie.
★ ISL Football: Chennai - Jamshedpur teams clash.
★ The BCCI has released the full schedule of the cricket series that the Indian cricket team will play in 2022.
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...