முகாலய பேரரசு
1. ஷெர்ஷா எந்த வம்சத்தை சார்ந்தவர்? சூர் வம்சம்
2. இந்தியாவில் முகாலய ஆட்சி நடைபெற்ற காலம் எது? கி பி 1526 முதல் கிபி 1707 வரை
3. முகாலய மன்னர்களை ஆட்சிக்கால படி வரிசைப்படுத்துக? பாபர் ஹுமாயின் அக்பர் ஜஹாங்கீர் ஷாஜகான் அவுரங்கசீப்
4. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்? முகமது பாபர்
5. பாபரின் இயற்பெயர் யாது? ஜாகிருதின் முகமது
6. ஜாகிருதின் என்ற சொல்லின் பொருள் யாது? நம்பிக்கையை காப்பவர்
7. இப்ராஹிம் லோடி பதவியை விட்டு நீக்க தௌலாத்கான்லோடி யாருடைய உதவியை நாடினார்? பாபர்
8. முதலாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது? கிபி 1526
9. முதலாம் பானிபட் போர் யாருக்கிடையே நடைபெற்றது? பாபர் மற்றும் இப்ராஹிம் லோடி
10. கன்வா போர் எப்போது நடைபெற்றது? கிபி 1527 பாபர் மற்றும் ராணா சங்கா இடையில்
11. சந்தேரி போர் எப்பொழுது நடைபெற்றது? கிபி 1528
12. பாபரின் சுயசரிதையின் பெயர் என்ன? துசிக்-இ-பாபரி
13. ஆக்ராவில் சூர் வம்ச ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்? ஷெர்ஷா
14. இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது? கிபி 1556 பைராம் கான் மற்றும் ஹெமு இடையே
15. அக்பர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் அகமதுநகர் அரசின் பகர ஆட்சியாளராக இருந்தவர் யார்? ராணி சந்த் பீவி
16. ஹால்டிகாட் போர் எப்பொழுது நடைபெற்றது? கிபி 1576 அக்பர் மற்றும் ராணா பிரதாப் இடையே
17. முகாலய பேரரசு தொடக்ககால தலைநகரம் எது? ஆக்ரா
18. அக்பரின் நினைவிடம் எங்கு உள்ளது? சிக்கந்தரா ஆக்ரா
19. முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிஸியா வரியை நீக்கியவர் யார்? அக்பர்
20. அக்பர் காலத்தில் வாழ்ந்த சீக்கிய குரு யார்? குரு ராம் தாஸ்
21. பதேபூர் சிக்ரி என்னும் நகரை உருவாக்கியவர் யார்? அக்பர்
22. ஜஹாங்கிர் அரசவைக்கு வருகை புரிந்த ஆங்கிலேயர் யார்? சர் தாமஸ் ரோ
23. ஆங்கிலேயரின் முதல் வணிக மையம் எது? சூரத்
24. ஷாஜகான் என்ற சொல்லின் பொருள் என்ன? உலகத்தின் அரசர்
25. சிவாஜியின் தந்தை பெயர் என்ன? ஷாஜி பான்ஸ்லே
26. முகாலய மாமன்னர்களின் கடைசி அரசர் யார்? அவுரங்கசீப்
27. ஆலம்கீர் (உலகை கைப்பற்றியவர் )என்று அழைக்கப்பட்டவர் யார்? அவுரங்கசீப்
28. காமரூபம் என்றழைக்கப்பட்டது எது? அசாம்
29. சிவாஜி எந்த ஆண்டு மராத்திய நாட்டின் பேரரசர் ஆனார்? கிபி 1674
30. பிரெஞ்சுக்காரர்களின் முதல் வணிக மையம் எங்கு நிறுவப்பட்டது? பாண்டிச்சேரி
31. முகாலய பேரரசு பிரதம மந்திரி எவ்வாறு அழைக்கப்பட்டார்? வக்கீல்
32. முகாலய பேரரசு வருவாய் துறை மற்றும் செலவுகள் அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? வஜீர் அல்லது திவான்
33. முகாலய பேரரசு ராணுவத் துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? மீரபாக்ஷி
34. முகாலய பேரரசு அரண்மனை நிர்வாகத்தை கவனித்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? மீரசமான்
35. முகாலய பேரரசு தலைமை நீதிபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்? குவாஜி
36. முகாலய பேரரசு இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? சதா -உஸ் -சுதுர்
37. முகலாயப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகள் யாவை? சுபா சர்க்கார் பர்கானா கிராமம்
38. முகாலய பேரரசு மாகாணங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? சுபேதார்
39. முகலாயப் பேரரசில் நகரங்களும் பெருநகரங்களில் யாரால் நிர்வகிக்கப்பட்டது? கொத்தவால்
40. மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் யார்? அக்பர்
41. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்? ராஜா தோடர்மால்
42. ஜப்தி முறை யாரால் கொண்டுவரப்பட்டது? ராஜா தோடர்மால் அவர்களால் அக்பர் காலத்தில்
43. முகலாயர் காலத்தில் மாவட்ட அளவிலான வரி வசூல் அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்? அமில் குஜார்
44. முகலாயர் காலத்தில் ஜமீன்தார் கலால் வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? சுயயூர்கள்.
45. அக்பர் உருவாக்கிய மதம் எவ்வாறு அழைக்கப்பட்டது? தீன் இலாகி தெய்வ மதம்
46. இந்துக்களின் மீது ஜிஸ்யா வரியை விதித்த முகாலய மன்னர் யார்?அவுரங்கசீப்
47. பாரசீக கட்டடக் கலையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்? பாபர்
48. ஹூமாயூன் ஆள் டெல்லியில் கட்டப்பட்ட அரண்மனையின் பெயர் என்ன? தீன்-இ-பானா
49. பீகாரில் சதாரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள கல்லறை மாடம் யாரால் கட்டப்பட்டது? ஷெர்ஷா
50. அக்பரின் கல்லறை எங்கு உள்ளது?சிக்கந்தரா
51. புலந்தர்வாசா நுழைவுவாயில் யாரால் கட்டப்பட்டது? அக்பர்
52. பஞ்ச் மஹால் எனும் பிரமிடு வடிவிலான ஐந்து அடுக்கு கட்டடம் யாரால் கட்டப்பட்டது? அக்பர்
53. ரங் மஹால் சலிம் சிஸ்டி கல்லறை திவான் இ காஸ் திவான் இ ஆம் ஆகிய கட்டடங்களை கட்டியவர் யார்? அக்பர்
54. முகாலய பேரரசின் புகழ் யாருடைய காலத்தில் உச்ச நிலையை எட்டியது? ஷாஜகான்
55. டெல்லியில் உள்ள மிகப்பெரிய ஜும்மா மசூதி யாரால் கட்டப்பட்டது? ஷாஜகான்
56. ஆக்ராவில் உள்ள முத்து மசூதி யாரால் கட்டப்பட்டது? ஷாஜகான்
57. மயிலாசனம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது? ஷாஜகான்
58. தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? யமுனை நதிக்கரையில்
59. பிபிகா மக்பாரா என்னும் அவுரங்காபாத்தில் கட்டப்பட்ட கல்லறை யாரால் கட்டப்பட்டது?ஆஜாம் ஷா அவுரங்கசீப்பின் மகன்
60. லால் குயிலா என்றழைக்கப்படும் கோட்டை எது? டெல்லியில் உள்ள செங்கோட்டை
61. டெல்லியில் உள்ள செங்கோட்டையை கட்டியவர் யார்? ஷாஜகான்
62. ராணா பிரதாப் சிங்கின் குதிரையின் பெயர் என்ன? சேத்தக்
மிகவும் பயனுள்ள வினாக்கள்
ReplyDelete