தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், திருக்குறள் சேர்க்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து குரூப் 2, 2ஏ தகுதித்தாள் தேர்வில் மீண்டும் திருக்குறள் தொடர்பான பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வுத் திட்டம், பாடத்திட்டம் ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
1. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்(விரிந்துரைக்கும் வகை)
2. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை)
3. கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை)
இவற்றில் விரிந்துரைக்கும் வகை தமிழ் மொழித் தகுதித் தேர்வில் (குரூப் 2, 2ஏ மற்றும் IIஏ உள்பட) திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் எனும் பகுதி சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...