தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலில், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை நீக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 980 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதையடுத்து, பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், தங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, பணி மூப்பு பட்டியல் தயாராகி, பள்ளி கல்வி கமிஷனரகத்துக்கு வந்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பல்வேறு புகார்களால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் பெயர்கள் இருப்பதாக தெரிய வந்தது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கமிஷனரகம் பிறப்பித்துள்ள உத்தரவில், 'பதவி உயர்வு பட்டியலில், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களின் பெயர்களை நீக்கி, புதிய பட்டியல் வழங்க வேண்டும். 'எந்த காரணத்தை கொண்டும் புகாருக்கு ஆளானவர்கள், வழக்கில் சிக்கியோர், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானோரை பரிந்துரைக்கக் கூடாது' என கூறப்பட்டு உள்ளது.
- தினமலர் செய்தி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...