இதை
தாண்டி தங்கள் வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் தற்போது 20
ரூபாயும் மற்ற வங்கி ஏடிஎம்களின் பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. உடன் 23.6
ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த
ஆண்டு ஜனவரி முதல் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்கிறது.
அதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு
பரிவர்த்தனைக்குமான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலவச பரிவர்த்தனைகளை
தாண்டி மற்ற ஏடிஎம்களை பயன்படுத்தினால், ஜனவரி 1 ஆம் தேதி முதல்
ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து ரூ.25 ஆக வசூலிக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவுகள் அதிகரித்திருப்பதால் இந்த பரிவர்த்தனைக்
கட்டணத்தை உயர்த்திக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தை அதிகரித்துள்ள
நிலையில் ஜனவரி 1ல் இருந்து மற்ற வங்கிகளும் உயர்த்த இருக்கிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...