தமிழக பள்ளிக்கல்வி பாட
புத்தகங்களை, தமிழகத்தில் செயல்படும் அச்சகங்களில் மட்டும் அச்சடிப்பதில்
உள்ள சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு
செய்துள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
படிக்கும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியருக்கு, அரசின்
சார்பில் இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப் படுகின்றன.
இந்த புத்தகங்களை அச்சடிக்கும் பணியில், ஆந்திரா மற்றும் கர்நாடகா நிறுவனங்களும், பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, கலர் இல்லாத கறுப்பு, வெள்ளை பக்கங்களில் மட்டும், புத்தகங்களை அச்சடிக்கும் பணிகள், வெளிமாநில அச்சகங்களுக்கு வழங்கப்படுகின்றன. தமிழக அச்சகங்களை விட, வெளிமாநில அச்சகங்கள் குறைந்த விலையில், அச்சு பணிகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.இதிலுள்ள உண்மை நிலையை ஆராய்ந்து, தமிழக அச்சகங்களுக்கு பணிகள் வழங்குவதில் உள்ள சிக்கல்களை, தமிழக பாடநுால் கழகத்தின் வழியே குழு அமைத்து ஆய்வு செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...