அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் இடமாறுதல் 'கவுன்சிலிங்'கை நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
*
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் விருப்ப
இடமாறுதல் கவுன்சிலிங்வழங்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா பிரச்னையால்
கவுன்சிலிங் நடத்தப்படவில்லை.இடமாறுதல் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற
மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உயர் நீதிமன்றம்
விரிவான தீர்ப்பளித்தது.
*
அதில், இடமாறுதல் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள்
அறிவிக்கப்பட்டன. அதை பின்பற்றி, செப்டம்பருக்குள் இடமாறுதலை முடிக்க
உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் மற்றும் கொரோனா இரண்டாம் அலை பிரச்னைகளால்
இடமாறுதல் பணிகள் நடக்கவில்லை.
*
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு துவங்கும் நிலையில்,
கவுன்சிலிங்கை நடத்துவதா, தள்ளி வைப்பதா என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்
ஆலோசனை நடத்தினர். இந்த ஆண்டு எப்படியாவது கவுன்சிலிங்கை நடத்த வேண்டும்
என, பல ஆசிரியர் சங்கங்கள், அமைச்சரிடம் மனுக்கள் அளித்துள்ளன. இதன்படி,
ஜனவரியில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த முடிவானது.
*
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கவுன்சிலிங்குக்கான விதிகள் தயாரிக்கும் பணி
நடந்து வருகிறது. இதற்கான அரசாணை இந்த மாத இறுதியில்
வெளியிடப்படும்.இதையடுத்து, ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு,
'ஆன்லைன்' வழியில் இடமாறுதல் வழங்க, பள்ளி கல்வி அதிகாரிகள்
திட்டமிட்டுள்ளனர்
ReplyDeleteDecember 8, 2021 at 12:25 PM
I am lavanya working as BT ENGLISH in thanjavur aranmanai girls higher secondary school willing to mutual transfer to karur / trichy (surroundings of kulithalai)contact 6385582324Reply