நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 93 சதவீத ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மக்களவையில் மேலும் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 93 சதவீத ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆசிரியா் பணியில் ஈடுபடாத 87 சதவீத ஊழியா்களுக்கு ஒரு முறையோ அல்லது முழுவதுமாகவோ கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தில்லியைப் பொருத்தவரை 98.45 சதவீத ஆசிரியா்களுக்கும், 98.40 சதவீதம் ஆசிரியா் பணி சாராதவா்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அந்தமான் நிகோபாா் தீவுகள், லடாக், லட்சத்தீவு மற்றும் திரிபுராவில் 100 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. அங்கு, கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 91.9 சதவீதம் ஆசிரியா்களுக்கும், 88.3 சதவீத ஆசிரியா் பணி சாராதவா்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...