ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பரவி வரும் நிலையில், அது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது, கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் ஆகிய மாதங்களில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இதற்கிடையே, உலகையே தற்போது, கொரோனா தொற்றின் புதிய அவதாரமான ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, டெல்டா, டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றுகளை விட, மிகவும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை அடுத்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், ஒமைக்ரான் வகை வைரஸ் காரணமாக, தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதுஇந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த தி.மு.க.வைச் சேர்ந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சமூக வலைதளங்களில் பரவி வருவது வதந்தி என்றும், புதிய வகை வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது முற்றிலும் தவறான செய்தி என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...