நாள் : 19.11.2021
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , சட்டமன்ற பேரவை விதி எண் .110 - இன் கீழ் , ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் , அறிவுத் திறன் வகுப்பு , கணினிப் பயிற்சி போன்றவை பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும் எனும் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு , ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 1138 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் , 318 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் உள்ளிட்ட 1464 பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தி , தரமான கல்வி வழங்கிடும் வகையில் , பள்ளிக்கல்வித் துறையின் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் , கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் பயிற்சி , ஆங்கில இலக்கண பயிற்சி , செயல்வழி கற்றல் முறை பயிற்சி , புதிய பாடத் திட்ட பயிற்சி , ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி உள்ளிட்ட 35 வகையான பணியிடைப் பயிற்சிகளுடன் , அறிவுத் திறன் வகுப்பு பயிற்சி , கணினிப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும் , ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கிட அரசாணை ( நிலை ) எண் .89 , ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை , நாள் 19.11.2021 - இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...