Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!

Screenshot_2021_1125_221407
 பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை நன்கு ஆய்வு செய்த பின்னர் , அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது : 

( i ) . 2021-2022ஆம் கல்வியாண்டில் , அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முக்கிய பாடங்களான தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் , உயிரியல் , தாவரவியல் , விலங்கியல் , பொருளியல் . வரலாறு , புவியியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் காலியாகவுள்ள 2,774 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக அந்தந்த பள்ளிகள் அமைந்துள்ள ஊர்கள் மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு , சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் , மேல்நிலைப் பிரிவிற்கான உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை கொண்ட குழு மூலமாக , ஒப்பந்த அடிப்படையில் ( Contract Basis ) தற்காலிகமாக நிரப்பிக் கொள்வதற்கு பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது . 

( ii ) இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை , அவர்கள் நியமனம் செய்யப்படும் நாளிலிருந்து ஐந்து மாதங்களுக்கு அல்லது நேரடி நியமனமாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மற்றும் பதவி உயர்வு மூலம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படும் வரை இவற்றில் எது முந்தியதோ அது வரையில் மட்டும் நிரப்பிக் கொள்வதற்கு பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது . 

( iii ) . இவ்வாறு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில்    ( Contract Basis ) தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ .10,000 / - வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும் . 

( iv ) . இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தினை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மூலம் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது . 

இவ்வாறு நியமிக்கப்படும் தற்காலிக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கும் வகையில் ஏற்படும் செலவினம் ( 2774 x ரூ .10,000 × 5 மாதங்கள் ) ரூ .13,87,00,000 / -ஐ ரூபாய் பதிமூன்று கோடியே எண்பத்தேழு இலட்சம் மட்டும் ) நிதி ஒப்பளிப்புச் செய்து ஆணை வழங்கப்படுகிறது .

அரசாணை பதிவிறக்கம் செய்திட

Touch Here to download




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive