ஏற்கனவே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னை நோக்கி நகரும் என்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், வரும் 13ஆம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தற்போது வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது தென் மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்துக்கு அருகே கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருப்பூண்டியில் (நாகை) அதிகளவாக தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஏற்கனவே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அச்சுறுத்தி வரும் நிலையில், வங்கக் கடலில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பிறகே, அது மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...