Revision Exam 2025
Latest Updates
10.3.20-க்கு முன்பாக உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உத்தரவு வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர், நிதித்துறை செயலாளர் மற்றும் மனித வள மேலாண்மை துறை செயலாளருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை - கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் கடிதம்.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.11.21
திருக்குறள் :
கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
பொருள்
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என எண்ணாது உலகு
பழமொழி :
One step forward and two steps backward.
சாண் ஏறினால் முழம் சறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும்.
2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்
பொன்மொழி :
தனியாக நடக்க தயாராக இருங்கள்..
உங்களுடன் தொடங்கும் பலர்
நீங்கள் முடிக்கும் போது
உங்களுடன் இருக்க மாட்டார்கள்.!.------ மேரி கோம்
பொது அறிவு :
1.நேரு விளையாட்டரங்கில் ஆடப்படும் விளையாட்டு எது?
கால்பந்து.
2. உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம் எது?
ஐக்கிய அமெரிக்க நாடுகள்.
English words & meanings :
Set off - to explore, வெடிக்க வைத்தல்,
put together - organise an event, ஒரு காரியத்தை ஒழுங்கு செய்தல்
ஆரோக்ய வாழ்வு :
விட்டமின் A - பளபளக்கும் தோல், அழகிய முடி, ஆரோக்கிய நகம், சிறந்த பார்வை, வலுவான எலும்பு. காணப்படும் உணவுப் பொருட்கள் - காரட், மீன் எண்ணெய், கீரை, முட்டை, பாலாடைக் கட்டி, பால், ஈரல்
கணினி யுகம் :
Windows Logo (Display or hide the Start menu)
Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
நவம்பர் 26
அரசியல் சாசன தினம் (இந்தியா)
இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம்(Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக [1] அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.
- 1949 – அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள்
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, நவம்பர் 26, 1954 – மே 17[8] அல்லது மே 18[1] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்தார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
நீதிக்கதை
கதிர் செய்த செயல்
கதை :
பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் தெய்வசிகாமணி அந்தப் பக்கமாக வந்தார். அவர் ஒரு மாற்றுத் திறனாளி.
அவர் தூரமாக வரும்போதே, மாணவன் கதிர், டேய் அங்க பாருங்கடா யார் வர்றதுன்னு என்று கூறிவிட்டு காலில் ஊனம் இருப்பதுபோல நடந்து காட்டினான். மற்ற மாணவர்கள் எல்லாம் சிரித்தனர். ஆசிரியரோ கண்டும் காணாமல் சென்று விட்டார். இது வழக்கமாக நடந்து வந்தது.
வீட்டில் ஒரே பையன் என்பதால் கதிருக்கு செல்லம் அதனால் அதிகமாக குறும்புகள் செய்வான். பெற்றோரும் அவனைக் கண்டிப்பதில்லை. விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும், கதிர் நன்றாகப் படிப்பான். பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பின்னும் அவனது கலாட்டா குறையவில்லை.
ஒரு நாள் கல்லூரிக்குச் சென்று திரும்பிய கதிர், படுக்கைக்குப் போனான். அசதியில் தூங்கியவன் மறுநாள் எழுந்திருக்கவில்லை. உடலில் ஜூரம் கொதித்தது. உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
பக்கவாதம் தாக்கியிருப்பதாக டாக்டர்கள் கூறினர். இறுதியில் ஒரு கால் நடக்க முடியாமல் போய்விட்டது. அதனால் கதிர் கல்லூரிக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு வீட்டிலேயே முடங்கிவிட்டான்.
ஆசிரியரை நாம் எப்படியெல்லாம் கேலி செய்தோம். அதற்குச் சரியான தண்டனைதான் கிடைத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.
நீதி :
நாம் மற்றவர்களுக்கு துன்பம் செய்தால் அந்த துன்பம் நமக்கே வந்தடையும்.
இன்றைய செய்திகள்
26.11.21
★புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஹரிராஜ் என்ற மாணவர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாநில அளவிலான ஓவியப் போட்டியில் சாதித்து வருகிறார்.
★நகர முன்னேற்றத்தை மதிப்பிடும் ‘நிதி ஆயோக்’ திட்ட மதிப்பீட்டில் இந்திய அளவில் கோவைக்கு இரண்டாவது இடம்.
★தமிழகத்துக்கு ஐந்து நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
★75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் நாளை நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படவுள்ளது
★வேளாண்மை, உணவுமுறையில் ஏற்படும் எதிர்கால அதிர்ச்சிகளை எதிர்கொள்ள நாடுகள் தயாராகுங்கள்: ஐ.நா. எச்சரிக்கை.
★ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக அந்நாட்டின் இப்போதைய நிதியமைச்சர் மக்தலீனா ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
★இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
★சாம்பியன் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி.
Today's Headlines
Hariraj, a student from a government school near Aranthangi in Pudukkottai district, has been competing at the state-level painting competition for 3 consecutive years.
Coimbatore ranks second in India in the ‘Nithi Ayog’ project evaluation for urban development.
Indian metrological center informed Orange Alert for Tamil Nadu for five days.
The 75th Independence year will be celebrated as constitution day tomorrow in the Central Hall of the Parliament House with great enthusiasm and joy.
UNO warned that Countries must be prepared for future shocks in agriculture and diet.
Sweden's current Finance Minister Magdalena Anderson has been elected as Sweden's first female Prime Minister.
India's P V Sindhu and Srikanth qualify for 2nd round of Indonesian Open Badminton Tournament
Champions League Football: Manchester City team win the match.
Prepared by
Covai women ICT_போதிமரம்